கிரீட்
From Wikipedia, the free encyclopedia
கிரீட் (Crete, கிரேக்க மொழி: Κρήτη) கிரேக்கத் தீவுகளில் பெரியதும் மிகுந்த மக்கள்தொகை கொண்டதுமான தீவு ஆகும். மேலும் நடுநிலக் கடலில் உள்ள தீவுகளில் ஐந்தாவது பெரியத் தீவாகவும் விளங்குகிறது. கிரீசின் பதின்மூன்று நிர்வாக வலயங்களில் ஒன்றாக விளங்குகிறது. கிரீசின் பண்பாட்டு பாரம்பர்யத்திலும் பொருளாதாரத்திலும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. தன் அடையாளப் பண்பாட்டுக்கூறுகளாக கிரீட்டிய வழக்குமொழி, கவிதை மற்றும் இசை வடிவங்களைக் கொண்டுள்ளது. (கி.மு. 2700 – கி.மு. 1420 காலங்களில் ஐரோப்பாவில் முதல் அரண்மனைகளைக் கட்டிய, பழமையான உயர் பண்பாட்டு நாகரிகமான மினோவன் நாகரிகத்தின் மையமாக இருந்தது.[1]
விரைவான உண்மைகள் கிரீட் Περιφέρεια Κρήτης, நாடு ...
கிரீட்
Περιφέρεια Κρήτης | |
---|---|
கிரீசின் வலயங்கள் | |
நாடு | கிரேக்க நாடு |
தலைநகர் | எரெக்கிளான் |
கிரீசின் வலய அமைப்புகள் | பட்டியல்
|
அரசு | |
• வலய ஆளுனர் | இசுடாவ்ரோசு ஆர்னவ்டாகிசு (பான்எலெனிக் சோசலிச இயக்கம்) |
பரப்பளவு | |
• மொத்தம் | 8,336 km2 (3,219 sq mi) |
உயர் புள்ளி | 2,456 m (8,058 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 6,21,340 |
• அடர்த்தி | 75/km2 (190/sq mi) |
ஐஎசுஓ 3166 குறியீடு | GR-M |
இணையதளம் | www |
மூடு