காசி மக்கள், மேகாலயா
இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு / From Wikipedia, the free encyclopedia
காசி மக்கள் (Khasi people) வடகிழக்கு இந்தியாவின் மேகாலயா, அசாம் மாநிலங்களிலும் மற்றும் வங்காள தேசத்தின் காசி மலைகளில் வாழும் பழங்குடி மக்கள் ஆவார். இம்மக்கள் திபெத்திய-பர்மிய மொழியின் உட்பிரிவான காசி மொழியை பேசுகின்றனர். இம்மக்கள் காசி மொழியை எழுதுவதற்கு ஆங்கில எழுத்துமுறையைப் பயன்படுத்துகின்றனர்.
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
பாரம்பரிய உடையில் காசி பழங்குடிப் பெண்கள் | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
1,512,831 | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
இந்தியா | 1,427,711[1] |
மேகாலயா | 1,382,278[2] |
அசாம் | 34,558[3] |
வங்காளதேசம் | 85,120 |
மொழி(கள்) | |
காசி மொழி | |
சமயங்கள் | |
கிறித்தவம் 80%,[4] நியாம் காசி 20%[5] | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
காரோ மக்கள், கெமர் மக்கள், பலௌங் மக்கள், வா மக்கள் |
மூடு
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்குப்படி, இந்தியாவில் 14,27,711 மற்றும் வங்காளதேசத்தில் 85,120 காசி மக்கள் உள்ளனர். காசி மக்களில் 80% கிறித்தவத்தையும், 20% காசி மக்கள் நியாம் காசி சமயத்தையும் பின்பற்றுகின்றனர்.
இட ஒதுக்கீட்டின் சலுகைகள் பெற இந்திய அரசு இம்மக்களை பட்டியல் பழங்குடி வகுப்பில் சேர்த்துள்ளது.