![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c3/Kala_Ghoda_Statue.jpg/640px-Kala_Ghoda_Statue.jpg&w=640&q=50)
கலா கோடா
மும்பையின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள ஒரு பிறை வடிவ கலை நகரம் / From Wikipedia, the free encyclopedia
கலா கோடா (Kala Ghoda) என்பது இந்தியாவின் மும்பையின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள ஒரு பிறை வடிவ கலை நகரமாகும்.[1] அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் மற்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கராலயம், ஜஹாங்கீர் கலைக்கூடம், தேசிய நவீன கலைக்கூடம் மற்றும் கலை அறக்கட்டளை-தற்கால இந்திய கலை நிறுவனம் போன்ற கல்வி நிறுவனங்கள் உட்பட நகரின் பல பாரம்பரிய கட்டிடங்கள் இங்கு உள்ளன.[2]
விரைவான உண்மைகள் கலா கோடா கலை வளாகம், நாடு ...
கலா கோடா கலை வளாகம் | |
---|---|
கலை நகரம்/அண்மைப்பகுதி | |
![]() கலா கோடா சிலை | |
ஆள்கூறுகள்: 18.9307°N 72.8331°E / 18.9307; 72.8331 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மெட்ரோ | மும்பை |
அஞ்சல் குறியீட்டு எண் | 400032 |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/40/Kala_Ghoda_Signpost.jpg/320px-Kala_Ghoda_Signpost.jpg)
இப்பகுதி ஆண்டுதோறும் பிப்ரவரியில் கலைக் கூட கலை விழாவை நடத்துகிறது. கிழக்கே மும்பை துறைமுகத்தின் கப்பல்துறை, தெற்கே மும்பை ரீகல் சினிமா, வடக்கே உதாத்மா சௌக் மற்றும் புளோரா நீரூற்று மற்றும் மேற்கில் ஓவல் மைதானம் ஆகியவற்றுக்கு இடையே இந்தப் பகுதி அமைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை இதன் வடகிழக்கில் உள்ளது.