கரோல் கிரெய்டர்
அமெரிக்க மூலக்கூறு உயிரியலாளர் மற்றும் நோபல் பரிசு பெற்றவர் / From Wikipedia, the free encyclopedia
கரோல் கிரெய்டர் (Carol Greider, பிறப்பு: ஏப்ரல் 15, 1961) என்பவர் ஒரு மூலக்கூற்று உயிரியலாளர்[1]. இவர் 1984 ஆம் ஆண்டில் எலிசபெத் பிளாக்பர்ன் என்பவருடன் இணைந்து நடத்திய டெலொமெரேஸ் என்ற நொதியத்தைக் கண்டுபிடித்தார். இவரே நிறப்புரிகளின் முனைகளில் இருக்கும் முனைக்கூறுகளின் அமைப்புக் குறித்து முதன் முதலாக ஆராய்ந்தவர். நிறப்புரிகள் எவ்வாறு காக்கப்படுகின்றன குறித்த ஆய்வுக்காக பிளாக்பர்ன், மற்றும் ஜாக் சோஸ்டாக் ஆகியோருடன் இவருக்கு 2009 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது[2].
விரைவான உண்மைகள் கரோல் கிரெய்டர்Carol Greider, பிறப்பு ...
கரோல் கிரெய்டர் Carol Greider | |
---|---|
பிறப்பு | ஏப்ரல் 15, 1961 (1961-04-15) (அகவை 63) சான் டியேகோ, கலிபோர்னியா |
வாழிடம் | ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | மூலக்கூற்று உயிரியல் |
பணியிடங்கள் | ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | கலிபோர்னியா பல்கலைக்கழகம், சாண்டா பார்பரா(1983) கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)(1987) |
ஆய்வு நெறியாளர் | எலிசபெத் பிளாக்பர்ன் |
அறியப்படுவது | முனைக்கூறுகளின் ஆய்வு |
விருதுகள் | லாஸ்க்கர் விருது, மருத்துவத்துக்கான நோபல் பரிசு (2009) |
மூடு