பறவை இனம் From Wikipedia, the free encyclopedia
கருந்தலைக் கடற்காக்கை ( Black-headed gull, Croicocephalus ridibundus ) என்பது ஒரு சிறிய கடற்காக்கையாகும். இது ஐரோப்பா உள்ளிட்ட பலேர்க்டிக் பகுதியிலும், கடலோர கிழக்கு கனடாவிலும் இனப்பெருக்கம் செய்கிறது. இதில் பெரும்பாலான பறவைகள் குளிர்காலத்தில் தெற்கு நோக்கி வலசை போகின்றன. ஆனால் சில பறவைகள் ஐரோப்பாவின் மித வெப்ப மண்டல மேற்குப் பகுதிகளில் வாழ்கின்றன. வடகிழக்கு வட அமெரிக்காவிலும் சிறிய எண்ணிக்கைகள் காணப்படுகின்றன. அங்கு இது முன்னர் சாதாரன கருந்தலை கடற்காக்கை என்று அறியப்பட்டது. பல கடற்காக்கைகளைப் போலவே, இது முன்பு லாரஸ் பேரினத்துக்கு உட்பட்டதாக வைக்கப்பட்டிருந்தது.
கருந்தலை கடற்காக்கை | |
---|---|
கோடைக்கால சிறகுகளுடன் | |
குளிர்கால சிறகுகளுடன் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | குரோகோசெபாலசு |
இனம்: | கு. ரிதிபண்டசு |
இருசொற் பெயரீடு | |
குரோய்கோசெபாலசு ரிதிபண்டசு (லின்னேயஸ், 1766) | |
ஈபேர்டு நிலப்படம் கு. ரிதிபண்டசு ஆண்டு முழுவதும் கோடையில் குளிர்காலத்தில் | |
வேறு பெயர்கள் | |
லாரசு ரிதிபண்டசு லின்னேயஸ், 1766 |
இதன் விலங்கியல் பெயரில் உள்ள இனப்பெயரான க்ரோயிகோசெபாலஸ் என்ற சொல் பண்டைய கிரேக்கச் சொற்களான க்ரோய்ஸோ, "நிறம்" மற்றும் கெபாலே, "தலை" ஆகியவற்றின் சேர்க்கையில் உருவாக்கபட்டது. அதேபோல சிறப்பினப் பெயரான ரைபண்டஸ் என்பது இலத்தீன் மொழியில் "சிரிப்பது" என்பது பொருளாகும்.[2]
இந்தக் கடற்காகம் 37–44 cm (14+1⁄2–17+1⁄2 அங்) நீளமும், 94–110 cm (37–43+1⁄2 அங்) இறக்கை அகலமும், எடைகள்190–400 g (6+3⁄4–14+1⁄8 oz) கொண்டது.
இப்பறவை பறக்கும்போது, இறக்கையின் வெளி விளிம்பு வெள்ளையாக தெரிவது இதை அடையாளங் கண்டுகொள்ள துணை செய்யும். கோடைக் காலத்தில் முதிர்ந்த பறவைகளின் தலை சாக்லேட்-பழுப்பாக (தொலைவில் இருந்து கருப்பு நிறமாகத் தெரிந்தாலும், கருப்பு நிறம் அல்ல) இருக்கும். உடலின் மேற்பகுதி சாம்பல் நிறமாகவும், இறக்கை முனைகள் கருப்பாகவும், அலகுமு, கால்களும் சிவப்பாகவும் இருக்கும். குளிர்காலத்தில் தலையின் நிறம் வெளுத்து போய், இரண்டு கரும் புள்ளிகள் மட்டுமே இருக்கும். முதிர்ச்சியடையாத பறவைகளின், உடலின் பெரும்பகுதியில் பழுப்பு நிற புள்ளிகளும்,[3] வாலில் ஒரு கருப்பு பட்டையுடனும் இருக்கும். பாலினங்களுக்கு இடையே இறகுகளில் எந்த வேறுபாடும் இல்லை.[4]
இப்பறவை பெரிய நாணல் படுக்கைகள், சதுப்பு நிலங்கள் அல்லது ஏரிகளில் உள்ள தீவுகளில் உள்ள தரையில் கூடு கட்டுகிறது.[4] இது ஒரு கடற்பரப்புக்குரிய இனம் அல்ல, கடற்கரையிலிருந்து வெகு தொலைவில் கடலில் அரிதாகவே காணப்படும்.
கருந்தலை கடற்காகம் ஒரு துணிச்சலான, சூழலுக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் பறவை ஆகும். இது நகரங்களில் உள்ள பூச்சிகள், மீன்கள், விதைகள், புழுக்கள், குப்பைகள், அழுகிய இறைச்சி, உழுத வயல்களில் உள்ள முதுகெலும்பற்ற உயிர்கள் போன்றவற்றை வேறுபாடின்றி உண்கிறது.[4] இது அவ்வளவாக ஒலி எழுப்பாத இனமாகும். குறிப்பாக கூட்டங்களில் "கிரீ-ஆர்" என்ற அழைப்பு இருக்கும். இதன் அறிவியல் பெயரின் பொருள் சிரிக்கும் கடற்காகம் என்பதாகும்.
இந்த இனம் முதிர்ச்சி அடைய இரண்டு ஆண்டுகள் ஆகும். பெரும்பாலான கடற்காகங்களைப் போலவே, கருந்தலை கடற்காகங்களும் நீண்ட காலம் வாழும் பறவைகள் ஆகும். அதிகபட்ச வயது குறைந்தது 32.9 ஆண்டுகள் என காடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 63 வயதுடைய பறவையைப் பற்றிய ஐயத்துக்குரிய தகவல் இப்போது நம்பப்படுகிறது.
கருந்தலைக் கடற்காகம் ஐரோப்பாவின் பெரும்பகுதிகளில் காணப்படுகின்றது. இது யப்பான் மற்றும் கிழக்கு சீனா வரை பாலேர்டிக் முழுவதும் காணப்படுகிறது.[5] சிறிய எண்ணிக்கையிலான பறவைகள் வடகிழக்கு கனடாவிலும் இனப்பெருக்கம் செய்கின்றன. மேலும் குளிர்காலத்தில் வடகிழக்கு வட அமெரிக்காவில் வர்ஜீனியா வரை தெற்கே காணப்படுகின்றன. பெரும்பாலும் இதேபோன்ற தோற்றமுடைய போனபார்டேஸ் கடற்காகம் மற்றும் சில கரீபியன் தீவுகளிலும் காணப்படுகின்றன. கரோலினா கடற்கரையில் மிகவும் அரிதான மாறுமியல்புடைய கடற்காகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
முட்டை ஓட்டை அகற்றுதல் என்பது குஞ்சு பொரித்தவுடன் பறவைகளிடத்தில் காணப்படும் ஒரு நடத்தை ஆகும். இது பெரும்பாலும் வேட்டையாடிகளிடமிருந்து ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் செயலாகும்.[6] முட்டை ஓடுகளை அகற்றுவதால் வேட்டையாடிகளின் பார்வையில் கூடு படுவதை தவிர்க்கும் ஒரு முறையாகும். அதாவது முட்டை ஓடுகளை கூட்டில் இருந்து அகற்றுவது என்பது உருமறைப்புக்கு ஏற்ற ஒரு செயல்பாடாகும்.[7] முட்டை ஓடுகள் கூட்டில் இருந்து எவ்வளவு தொலைவுக்கு அப்புறப்படுத்தப் படுகிறதோ, அந்த அளவுக்கு வேட்டையாடப்படும் அபாயம் குறையும்.[6] கருந்தலை கடற்காகத்தின் முட்டைகளை பல்வேறு வகையான பறவைகள், நரிகள், பிற கருந்தலை கடற்காகங்களும் கூட வேட்டையாடுகின்றன. வேட்டையாடி விலங்குகள் அருகில் இருக்கும்போது தாய்ப் பறவகள் ஒருவித ஆக்ரோசத்தை காட்டினாலும், முதல் 30 நிமிடங்களில், குஞ்சுகளின் பெற்றோர்கள் வேட்டையாடிகளின் கவனத்தை சிதறடிக்கும் போது, குஞ்சுகளை மற்ற கருந்தலைக் கடற்காகங்கள் எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடும்.[7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.