From Wikipedia, the free encyclopedia
ஈபேர்டு (Ebird) என்பது பல்லுயிரியம் சார்ந்த ஒரு மக்கள் அறிவியல் திட்டமாகும். உலகளாவிய பறவை நோக்கர்களின் பறவைகாணல் நிகழ்வுகளைப் பதிவு செய்து, அவற்றை ஒருங்கிணைப்பதற்கான இணையவழிக் களமாக ஈபேர்டு உள்ளது. கார்னெல் பல்கலைக்கழகத்தின் பறவையியல் ஆய்வுக்கூடத்தால் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
வலைத்தள வகை | காட்டுயிரியன தரவுத்தளம் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | பல்கேரியம், சீனம், குரோசியம், செக் மொழி, தேனிய மொழி, இடாய்ச்சு, செருமானிய மொழி, ஆங்கிலம், பாரோயீசு, பின்னிய மொழி, பிரெஞ்சு மொழி, கிரோயோல், எபிரேய, இந்தோனேசிய மொழி, இசுலேன்சுக மொழி, இத்தாலிய மொழி, சப்பானிய மொழி, இலத்துவிய மொழி, மலையாளம், மொங்கோலிய மொழி, பூக்மோல் மொழி, போலிய மொழி, போர்த்துக்கேய மொழி, உருசிய மொழி, செருபிய மொழி, எசுப்பானியம், சுவீடிய மொழி, தாய் (மொழி), துருக்கிய மொழி, உக்குரேனிய மொழி |
உருவாக்கியவர் | கார்நெல் பறவையியல் ஆய்வுக்கூடம் |
வெளியீடு | 2002 |
தற்போதைய நிலை | செயல்பாட்டில் உள்ளது |
உரலி | eBird |
பறவை காணல்களை சேகரித்து, சேமித்தும் வைப்பதன் மூலம் பறவைகளின் பரவலையும் அவற்றின் திரள்வையும் குறித்து ஒப்பீடு செய்வதற்கான விவரத்தொகுப்பு கிடைக்கிறது; இத்தரவுகள் பொதுவெளியிலும் அறிவியல் பயன்பாட்டிற்கும் பரவிட ஈபேர்டு உதவுகிறது[1]. ஈபேர்டு கூட்டு மூலத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ள ஒரு அமைப்பாகும்[2]. அறிவியலை மக்கள்மயப்படுத்துவதற்கும் மக்கள் அறிவியலை ஊக்கப்படுத்தி, அவர்கள் சேகரித்த தகவல் தரவுகளை அவர்கள் பயன்பாட்டுக்கே அளிப்பதற்கும் எடுத்துக்காட்டாக இது விளங்குகிறது[3].
ஈபேர்டு 2002ஆம் ஆண்டு கார்னெல் பல்கலைக்கழகத்தின் பறவையியல் ஆய்வுக்கூடம் மற்றும் தேசிய ஆதுபான் குமுகம் ஆகிய இரு அமைப்புகளால் தொடங்கப்பட்டது. சாக் லாரிவீ எனப்படும் ஆய்வாளரால் 1975ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு தரவுத்தளத்தை அடிப்படையாகக் கொண்டே இது செயல்பாட்டுக்கு வந்தது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.