கம்போடியாவின் பொருளாதாரம்
From Wikipedia, the free encyclopedia
கம்போடியாவின் பொருளாதாரம் (The economy of Cambodia) தற்பொழுது தடையில்லா சந்தைப் பொருளாதரத்தைப் பின்பற்றுகிறது. இதனால் கம்போடியாவில் கடந்த பத்தாண்டுகளில்[5] விரைவான பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. 2012 ஆம் ஆண்டில் கம்போடியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 13 மில்லியன் டாலர்கள் ஆகும். தனிநபர் வருமானம்,[6] வேகமாக அதிகரித்து எனினும், பெரும்பாலான அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது இவ்வளர்ச்சி குறைவாகவே உள்ளது. நெசவு மற்றும் சுற்றுலாத் தொழில்கள் இரண்டும் கம்போடியாவின் மிகப்பெரிய பொருளீட்டும் தொழிலாக உள்ளன[7]. அதேவேளையில் விவசாயம், கிராமப்புறத்தில் வசிக்கும் பல கம்போடியர்களுக்கு நிலையான வருவாயை ஈட்டித்தரும் தொழிலாக நிலைத்து இருக்கிறது. வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் உணவுத்துறை தொடர்பான நடவடிக்கைகளில் சேவைத்துறை மிகுந்த கவனம் செலுத்தியது. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை கடற்கரைக்கு அருகில் கண்டறிந்துள்ளதாக சமீபத்தில் கம்போடியா தகவல் கொடுத்துள்ளது.[8]
கம்போடியா பொருளாதாரம் | |
---|---|
வான் தோற்றம் புனோம் பென் | |
நாணயம் | ரியெல் |
நிதி ஆண்டு | நாட்காட்டி ஆண்டு |
சார்ந்துள்ள வர்த்தக அமைப்புகள் | உலக வணிக அமைப்பு, தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு, AFTA |
புள்ளி விவரம் | |
மொ.உ.உ | PPP $36.590 பில்லியன் (2012) பெயரளவு~ $14.250 பில்லியன் (2012) |
மொ.உ.உ வளர்ச்சி | 7.3% (2012) |
நபர்வரி மொ.உ.உ | PPP $2,490 (2012) பெயரளவு~ $1,150 (2012) |
துறைவாரியாக மொ.உ.உ | விவசாயம்: 34.7% தொழிற்சாலை: 24.3% சேவைத்துறை: 41.0% (2012 திட்டம்.) |
பணவீக்கம் (நு.வி.கு) | 4.1% |
தொழிலாளர் எண்ணிக்கை | 8.8 மில்லியன் (2010) |
தொழில் வாரியாகத் தொழிலாளர் எண்ணிக்கை | விவசாயம்: 57.6% தொழிற்சாலை: 15.9% சேவைத்துறை: 26.5% (2010) |
வேலையின்மை | 3.5% |
முக்கிய தொழில்துறை | பட்டியல்
|
தொழில் செய்யும் வசதிக் குறியீடு | 138th[1] |
வெளிக்கூறுகள் | |
ஏற்றுமதி | $8.433 பில்லியன் (2012) |
ஏற்றுமதிப் பொருட்கள் | துணிகள்,மரம், ரப்பர், அரிசி, மீன், புகையிலை, காலணிகள் |
முக்கிய ஏற்றுமதி உறவுகள் | ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
இறக்குமதி | $8.840 பில்லியன் (2012) |
இறக்குமதிப் பொருட்கள் | பெட்ரோலியப் பொருட்கள், சிகரெட்டுகள், தங்கம், கட்டுமானப் பொருட்கள், இயந்திரங்கள், மோட்டார் வாகனங்கள், மருந்துப் பொருட்கள் |
முக்கிய இறக்குமதி உறவுகள் | ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
மொத்த வெளிக்கடன் | $5.071 பில்லியன் (2012) |
பொது நிதிக்கூறுகள் | |
வருவாய் | $2.216 பில்லியன் (2012) |
செலவினங்கள் | $2.934 பில்லியன் (2012) |
பொருளாதார உதவி | 2011 ஆம் ஆண்டுக்காக $934 மில்லியன் தொகை சர்வதேச நன்கொடையாளர்கள் மூலம் மானியங்கள் மற்றும் சலுகைக் கடன்கள் உறுதியுடன். |
கடன் மதிப்பீடு | B+ (உள்நாடு) B+ (வெளிநாடு) BB- (T&C Assessment) (இசுடாண்டர்ட் அண்ட் புவர்சு)[4] |
அந்நியச் செலாவணி கையிருப்பு | US$3.84 பில்லியன் (2010) |
' |
1995 ஆம் ஆண்டில், நாட்டின் பொருளாதாரம் திட்டமிட்ட பொருளாதார அமைப்பில் இருந்து அதன் தற்போதைய சந்தை சார்ந்த அமைப்புக்கு மாற்றப்பட்டது.[9] இம் மாற்றங்களைத் தொடர்ந்து பணவீக்கம் 26% குறைந்து 1994 இல் 6% ஆக இருந்த வளர்ச்சி சதவீதம் 1995 இல் 7% ஆக உயரும் என திட்டமிடப்பட்டது. வெளிநாட்டு உதவி வருகையின் காரணமாக இறக்குமதி அதிகரித்தது. குறிப்பாக நாட்டின் ஆடைத் தொழிலில் ஏற்றுமதியும் மேலும் அதிகரித்தது. இறக்குமதி குறிப்பாக, நாட்டின் ஆடைத் தொழில் இருந்து, காரணமாக வெளிநாட்டு உதவி வருகை, மற்றும் ஏற்றுமதி அதிகரித்தது, மேலும் அதிகரித்துள்ளது.
பொருளாதார செயல்பாட்டுத் திறன்கள் மேம்படுத்தப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 1997-98 ஆம் ஆண்டுகளில் கம்போடியாவின் பொருளாதார வளர்ச்சி மெல்ல மெல்ல பின்னடையத் தொடங்கியது. பிராந்திய பொருளாதார நெருக்கடி, உள்நாட்டு கலவரங்கள், மற்றும் அரசியல் உட்பூசல் போன்றவை இதற்குக் காரணங்களாக இருந்தன. இக்காலத்தில் வெளிநாட்டு முதலீடுகள் குறைந்தன. 1998 இல் வறட்சி காரணமாக பிரதானமான அறுவடையும் குறைந்தது. ஆனால் 1999 இல் 30 ஆண்டுகளுக்குப் பிறகான ஒரு அமைதி நாட்டில் நிலவியது. இதனால் பொருளாத மறுமலர்ச்சி ஏற்பட்டு வளர்ச்சியானது மீண்டும் 4 சதவீதமாக உயர்ந்தது.
தற்போது, கம்போடியாவின் வெளியுறவுக் கொள்கை தாய்லாந்து, வியட்நாம் போன்ற அதன் அண்டை நாடுகளுடன் நட்புறவு கொள்வதிலும், அதே போல் பிராந்திய அளவிலான தெகிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்புடனும் மற்றும் உலகளாவிய வர்த்தக அமைப்புகளுடன் தன்னை ஒருங்கிணைத்துக் கொள்ளவும் கவனம் செலுத்துகிறது. வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சியில் கம்போடியா சில தடைகளை எதிர்கொண்டது. சிறந்த கல்விமுறைத் திட்டமிடல் மற்றும் திறமையான பயிற்சி பெற்ற தொழிலாளர்களின் தேவை அவசியம் முதலியவற்றை உணர்ந்தது. குறிப்பாக போதிய அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளின்றி போராடும் வறுமை நிறைந்த கிராமப்புறங்களில் இத்தேவை அதிகம் எனவும் உணரப்பட்டது. ஆயினும்கூட கம்போடியா, தொடர்ச்சியாக முதலீட்டாளர்களை ஈர்த்தது. குறைந்த கூலி, அதிக வேலையாட்கள், அருகாமையில் ஆசிய மூலப்பொருட்கள் மற்றும் சாதகாமான வரி வசூல் ஆகியன இதற்குக் காரணங்களாயின[10]