கம்போங் பத்து நிலையம் (ஆங்கிலம்: Kampung Batu Station; மலாய்: Stesen Komuter Kampung Batu) என்பது மலேசியா, கோலாலம்பூர், பத்து புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையமாகும்.[1]

விரைவான உண்மைகள் பொது தகவல்கள், அமைவிடம் ...
 KC03   PY13 
Rapid_KL_Logo
கம்போங் பத்து நிலையம்
Kampung Batu Station
பொது தகவல்கள்
அமைவிடம்கம்போங் பத்து நிலையம், பத்து, கோலாலம்பூர்
ஆள்கூறுகள்3°12′16.8″N 101°40′32.2″E
உரிமம் மலாயா தொடருந்து நிறுவனம்
இயக்குபவர்மலாயா தொடருந்து நிறுவனம் (KTM)
ரேபிட் ரெயில் (MRT)
தடங்கள்  பத்துமலை-புலாவ் செபாங் 
(கேடிஎம் கொமுட்டர்)
இருப்புப் பாதைகள்2 (கேடிஎம்)
2 (எம்ஆர்டி)
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KC03   PY13 
வரலாறு
திறக்கப்பட்டது KC03  சூலை 2010
 PY13  16 சூன் 2022
சேவைகள்
முந்தைய நிலையம்   கம்போங் பத்து நிலையம்   அடுத்த நிலையம்
பத்துமலை
>>>
தாமான் வாயூ
 
புலாவ் செபாங் வழித்தடம்
 
பத்து கென்டன்மன்
>>>
தம்பின்
செரி டெலிமா
>>>
குவாசா டாமன்சாரா
 
புத்ராஜெயா வழித்தடம்
 
பத்து கென்டன்மன்
>>>
புத்ராஜெயா சென்ட்ரல்
அமைவிடம்
கம்போங் பத்து நிலையம்
மூடு

இந்த நிலையம் வடக்கு கோலாலம்பூரில் உள்ள கம்போங் பத்து (Kampung Batu) எனும் கிராமத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்தக் கிராமம் கோலாலம்பூரில் உள்ள மிகப் பழைமையான கிராமங்களில் ஒன்றாகும்.

முன்பு பயன்படுத்தப்படாமல் இருந்த காலனித்துவ காலத் தொடருந்து நிலையம் இருந்த இடத்தில் கம்போங் பத்து நிலையம் புதிதாகக் கட்டப்பட்டது. இந்த நிலையம் புலாவ் செபாங் வழித்தடம், மற்றும் புத்ராஜெயா வழித்தடம் ஆகிய வழித்தடங்களின் மூலமாக கேடிஎம் கொமுட்டர் தொடருந்து சேவையை வழங்கி வருகிறது.[2]

வரலாறு

பத்துமலை கொமுட்டர் நிலையம் மற்றும் செந்தூல் கொமுட்டர் நிலையம் ஆகிய தொடருந்து நிலையங்களுக்கு இடையே மின்மயமாக்கப்படாத ஒருவழித்தடத்தின் ஒரு பகுதியாக இந்த நிலையம் முன்பு கட்டப்பட்டது. இருப்பினும், செந்தூலில் இருந்து பத்துமலை வரையிலான தொடருந்து வழித்தடத்தில் அமைக்கப்பட்ட மற்ற தொடருந்து நிலையங்களைப் போலவே இந்த நிலையமும் பயன்படுத்தப்படாமல் இருந்தது.

மலேசியாவில் நன்கு அறிமுகமான கட்டுமான நிறுவனமான ஒய்.டி.எல் நிறுவனம் (YTL Corporation), செந்தூல் ராயா பெருந்திட்டத்தைச் செயல்படுத்தும் போது, ​​பழைய கம்போங் பத்து தொடருந்து நிலையம் இடிக்கப்பட்டது. அதே இடத்தில், கிள்ளான் துறைமுக வழித்தடம் - செந்தூல் வழித்தடம் நீட்டிப்புக்காக புதிய கம்போங் பத்து நிலையம் மீண்டும் கட்டப்பட்டது.

செந்தூல் ராயா பெருந்திட்டம்

2010 சூலை மாதம், செந்தூல் ராயா பெருந்திட்டக் கட்டுமானம் முடிந்ததும், கிள்ளான் துறைமுக கொமுட்டர் நிலையத்தில் இருந்து பத்துமலை கொமுட்டர் நிலையம் வரை செல்லும் கிள்ளான் துறைமுக வழித்தடம் மூலமாக இந்த நிலையம் சேவை செய்யப்பட்டது.

2015 டிசம்பர் மாதம், கேடிஎம் கொமுட்டர் சேவைகளில் மாற்றம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, கம்போங் பத்து நிலையம்; செந்தூல் கொமுட்டர் நிலையம், பத்துமலை கொமுட்டர் நிலையம் ஆகிய நிலையங்களுக்கு இடையே இருந்த தொடருந்து வழித்தடத்தின் பகுதி; சிரம்பான் வழித்தடத்திற்கு மாற்றப்பட்டது.

இப்போது புலாவ் செபாங் தம்பின் தொடருந்து நிலையம் மற்றும் பத்துமலை கொமுட்டர் நிலையம் ஆகிய நிலையங்களுக்கு இடையே தொடருந்து சேவைகள் நடைபெறுகின்றன.

பேருந்து சேவைகள்

இரு வகையான பேருந்துச் சேவைகள் இந்த நிலையத்திற்கு பயணிகள் சேவைகளை வழங்குகின்றன. செந்தூல் கொமுட்டர் நிலையத்திற்குச் செல்லும்   MAROON   கோ கேஎல் நகர பேருந்துகளும் கம்போங் பத்து நிலையத்திற்குப் பேருந்து சேவைகளை வழங்கி வருகின்றன.

அத்துடன் கம்போங் பத்து நகர்ப்புறத்திற்குச் செல்லும் ரேபிட் கேஎல்   T120   மற்றும்   173   பேருந்துகளும் இந்த நிலையத்திற்குச் சேவைகளை வழங்குகின்றன.

மேற்சான்றுகள்

காட்சியகம்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.