![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4b/Kapu_Beach_Lighthouse_.jpg/640px-Kapu_Beach_Lighthouse_.jpg&w=640&q=50)
கபு, கருநாடகம்
க up ப் (கபு), இந்தியாவின் கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இது தேசிய நெடுஞ்சாலை 6 / From Wikipedia, the free encyclopedia
கபு (Kapu) கௌப் என்றும் அழைக்கப்படும் இது இந்தியாவின் கருநாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். இது தேசிய நெடுஞ்சாலை 17க்கு அருகில் உடுப்பிக்கும் மங்களூருக்கும் இடையில் உள்ளது. இங்கிருந்து ஒரு சாலை மஞ்சக்கல், சிரவா போன்ற இடங்களுக்கு செல்கிறது. இது கிருட்டிணர் கோயிலுக்கு புகழ் பெற்ற நகரமான உடுப்பிக்கு தெற்கே 13 கி.மீ தொலைவிலும், கருநாடகாவின் முக்கிய துறைமுக நகரமான மங்களூருக்கு வடக்கே 40 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
கபு, கருநாடகம் | |
---|---|
நகரம் | |
![]() கபு கலங்கரை விளக்கத்தின் வான் பார்வை | |
ஆள்கூறுகள்: 13.2238°N 74.7367°E / 13.2238; 74.7367 | |
நாடு | ![]() |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | உடுப்பி மாவட்டம் |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 6,850 |
மொழிகள் | |
• நிர்வாகம் | துளு, கன்னடம் |
• மண்டலம் | துளு, கொங்கணி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 574106 |
தொலைபேசிக் குறியீடு | 0820[1] |
ஐஎசுஓ 3166 குறியீடு | ஐ.எசு.ஓ 3166-2:ஐ.என் |
வாகனப் பதிவு | கேஏ-20 |
இணையதளம் | karnataka |
இது கலங்கரை விளக்கமும் மூன்று மாரியம்மன் கோயில்களும், திப்பு சுல்தான் கட்டிய கோட்டைக்கும் புகழ் பெற்றது. கபுவை உடுப்பி மாவட்டத்தின் வட்டத்தில் ஒன்றாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கபு ஆங்கிலேயர்களால் கௌப் என அழைக்கப்பட்டது.
அரேபிய கடலின் கரையில் ஒரு கடற்கரையும் ஒரு கலங்கரை விளக்கமும் இங்குள்ளது. இந்த இடத்தில் பல திரைப்படங்கள் படமாக்கப்பட்டுள்ளன. உடுப்பியில் உள்ள மென்மையான மால்பே கடற்கரையுடன் ஒப்பிடும்போது இங்கு கடல் மிகவும் கடுமையானதாகவும், அச்சுறுத்துவதாகவும் காணப்படுகிறது. பல்கலைக்கழக நகரமான மணிப்பாலில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள இது மாணவர்களுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு இடமாகும்.