![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3a/Bhagwan_beweging_gekwetst_door_reclame-affiche_van_het_NRC_met_de_tekst_profeet_%252C_Bestanddeelnr_933-0734-cropped.jpg/640px-Bhagwan_beweging_gekwetst_door_reclame-affiche_van_het_NRC_met_de_tekst_profeet_%252C_Bestanddeelnr_933-0734-cropped.jpg&w=640&q=50)
ஓஷோ
From Wikipedia, the free encyclopedia
ஓஷோ 1931 டிசம்பர் 11 இல் மத்திய பிரதேசத்தில் உள்ள குச்வாடா என்ற சிற்றூரில் பிறந்தார். குச்வாடா ஓஷோவுடைய தாய் வழி தாத்தா, பாட்டி வாழ்ந்து வந்த ஊர். முதல் ஏழு வருடங்கள் அங்கேதான் வளர்ந்தார். ஓஷோவுடைய பெற்றோர்கள் கடர்வாடாவில் வசித்து வந்தார்கள். தாத்தா இறந்த பிறகு பாட்டியுடன் கடர்வாடா வந்து விட்டார்.
![]() | இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
விரைவான உண்மைகள் ரஜினீஷ், பிறப்பு ...
ரஜினீஷ் | |
---|---|
![]() | |
பிறப்பு | ரஜினீஷ் சந்திர மோகன் ஜெயின் 11 December 1931 (1931-12-11) குச்வாடா, பரேலி தாலுக்கா, ரெய்சன் மாவட்டம், மத்தியப் பிரதேசம் |
இறப்பு | 19 January 1990 (1990-01-20) (aged 58) புனே, மகாராட்டிரம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | ஆன்மிகம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஆன்மிக பேச்சாளர், தியான குரு |
அரசியல் இயக்கம் | Jivan Jagruti Andolan; புது சந்நியாசம் |
மூடு
ஓஷோவுடைய இயர்பெயர் ரஜ்னீஷ் சந்திர மோகன். சிறு வயதிலிருந்தே தியானத்தில் ஈடுபட்ட ஓஷோ தன்னுடைய இருபத்து ஒன்றாவது வயதில் அதாவது 1953 மார்ச் 21 இல் ஞானம் அடைந்தார். கிழக்கில் ஞானமடைதல் என்பது முழுமையான தன்னுணர்வு அல்லது விழிப்புணர்வு நிலை என்பதை குறிப்பிடுவதாகும் கெளதமபுத்தர், கபீர், இரமணர் மற்றும் பலர் இப்படி ஞானம் அடைந்தவர்களாவர்.