செருமானிய வேதியியலாளர் From Wikipedia, the free encyclopedia
ஓட்டோ பால் ஹெர்மன் டியல்சு (Otto Paul Hermann Diels) ( டாய்ச்சு ஒலிப்பு: [ˈɔto ˈdiːls] ( கேட்க) ; 23 ஜனவரி 1876 – 7 மார்ச் 1954) ஒரு செருமானிய வேதியியலாளர் ஆவார். இவரது மிகவும் குறிப்பிடத்தக்க பணி கர்ட் ஆல்டருடன் டீல்சு-ஆல்டர் வேதிவினையில் இணைந்து பணியாற்றியதாகும். இது டையீன் தொகுப்புக்கான ஒரு முறையாகும். இந்த ஜோடிக்கு 1950 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. வளைய கரிம சேர்மங்களை தொகுப்பு முறையில் தயாரிக்கும் அவர்களின் முறை செயற்கை இரப்பர் மற்றும் நெகிழி உற்பத்திக்கு மதிப்புமிக்கதாக நிரூபிக்கப்பட்டது. [1] இவர் பெர்லின் பல்கலைக்கழகத்தில் தனது கல்வியை முடித்தார். பின்னர் இவர் அங்கு பணியாற்றினார். டியல்சு தனது நோபல் பரிசு பெற்ற வேலையை முடித்தபோது கீல் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார், மேலும் இவர் 1945 ஆம் ஆண்டில் ஓய்வு பெறும் வரை அங்கேயே இருந்தார். டியல்சு திருமணமானவர். இவருக்கு ஐந்து குழந்தைகள் இருந்தனர். இவர் 1954 ஆம் ஆண்டில் இறந்தார்.
ஓட்டோ டியல்சு | |
---|---|
பிறப்பு | ஆம்பர்கு, செருமானியப் பேரரசு | 23 சனவரி 1876
இறப்பு | 7 மார்ச்சு 1954 78) கீல், மேற்கு செருமனி | (அகவை
தேசியம் | செருமானியர் |
துறை | வேதியியல் |
பணியிடங்கள் | கீல் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | பெர்லின் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | எமில் பிசர் |
முனைவர் பட்ட மாணவர்கள் | கர்ட் ஆல்டெர் கார்ல் வில்ஹெம் ரோசண்முண்ட் |
அறியப்படுவது | டையீல்சு-ஆல்டர் வினை டையீல்சு – இரீசு வினை |
விருதுகள் | வேதியியலுக்கான நோபல் பரிசு (1950) |
டியல்சு 23 ஜனவரி 1876 இல் ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் பிறந்தார். மேலும் இவருக்கு இரண்டு வயதாக இருந்தபோது தனது குடும்பத்துடன் பெர்லினுக்குக் குடிபெயர்ந்தார். [2] 1895 ஆம் ஆண்டு தொடங்கி பெர்லின் பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு முன்பு அவர் பெர்லினில் பல்கலைக்கழக நாட்களின் போது, ஜோச்சிம்ஸ்தல்ஷ் ஜிம்னாசியத்தில் படித்தார். டியல்சு எர்மான் எமில் பிசரின் மாணவராக வேதியியலைப் படித்தார். இறுதியில் 1899 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார். [2]
பெர்லின் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற உடனேயே, அதே நிறுவனத்தில் வேதியியல் புலத்தில் இவருக்குப் பதவி வழங்கப்பட்டது. இவர் வேதியியல் புலத்தில் தர நிலைகளை விரைவாக முடித்ததால் இறுதியில் 1913 ஆம் ஆண்டில் துறைத்தலைவராக நிறைவு செய்தார். இவர் 1915 ஆம் ஆண்டு வரை பெர்லின் பல்கலைக்கழகத்தில் இருந்தார். அதன் பின் இவர் கீல் பல்கலைக்கழகத்தில் ஒரு பதவியை ஏற்றுக்கொண்டார், அங்கு இவர் 1945 ஆம் ஆண்டில் ஓய்வு பெறும் வரை இருந்தார். அவர் கீலில் இருந்த காலத்தில், அவர் கர்ட் ஆல்டருடன் இணைந்து டியல்சு-ஆல்டர் வினையை உருவாக்கினார், அதற்காக இவர்களுக்கு 1950 ஆம் ஆண்டில்வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆல்டருடனான இவரது பணியானது ஒரு செயற்கையான தொகுப்பு முறையை உருவாக்கியது. இது நிறைவுறா வளைய சேர்மங்களின் தொகுப்பை அனுமதிக்கிறது.செயற்கை இரப்பர் மற்றும் நெகிழிச் சேர்மங்கள் தயாரிப்பில் இந்தப் படிநிலை மிக முக்கியமானது.
டியல்சு 1909 ஆம் ஆண்டில் பவுலா கெயரை மணந்தார். தம்பதியருக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் என ஐந்து குழந்தைகள் இருந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது இவரது இரண்டு மகன்கள் கொல்லப்பட்டனர் . இவரது ஓய்வு நேரத்தில், டியல்சு வாசிப்பு, இசை மற்றும் பயணம் ஆகியவற்றை ரசித்தார். 1954 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் நாள் இறந்தார் [2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.