தூசி, தூள் முதலிய ஒவ்வாப் பொருள்களுக்கு உடல் உண்டாக்கும் இயல்பு நீங்கிய தடுப்புத் துலங்கல் From Wikipedia, the free encyclopedia
உடம்பிற்கு ஒத்துக் கொள்ளாத எதுவாக இருப்பினும் ஒவ்வாமை எனப்படும். ஒவ்வாமை என்பது மனித உடலின் நோய் தடுப்பாற்றல் அமைப்பில் உண்டாகும் கோளாறினால் ஏற்படும் ஒரு நிலையாகும். சூழலில் இருக்கின்ற சில ஒவ்வாப்பொருட்களால் (allergens) ஒவ்வாமை விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. பூச்சிக்கடி போன்றவற்றாலும் உடலில் ஒவ்வாமை விளைவுகள் ஏற்படும்.
ஒவ்வாமையால் அரிப்பு, தடிப்பு, மூக்கொழுகல், தும்மல், கண்களில் நீர்வழிதல் போன்ற விளைவுகள் சாதாரணமாக ஏற்படும். ஆஸ்துமா போன்ற உடல்நலக் கேட்டு நிலைகளுக்கு ஒவ்வாமையும் ஒரு பெருங்காரணமாக அமையும்.
ஒவ்வாமை என்னும் நிலையை 1906ல் வியன்னாவைச் சேர்ந்த கிளெமென்சு வான் பிர்குவே (பிர்குவெட்?) என்னும் குழந்தைகள் நல மருத்துவர் கண்டுபிடித்தார். அவரிடம் மருத்துவம் பெற்றுக் கொண்ட சிலர் தூசு, மகரந்தம், சில வகை உணவு வகைகள், இவற்றிற்கு அதீத எதிர்விளைவுகள் கொண்டவர்களாய் இருப்பதைக் கண்டபோது, பிர்குவே இந்நிலைக்கு ஒவ்வாமை (allergy) என்று பெயரிட்டார். இச்சொல் கிரேக்க மூலம் கொண்டது. allos + ergon என்னும் வேர்ச்சொற்களில் இருந்து allergy என்று பெயர் வந்தது.[1]
இம்யூனோகுளோபுளின் (immunoglobulin E - IgE) என்னும் உடலெதிர்பொருள் (?antibody) கண்டுபிடிப்பு ஒவ்வாமையைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள உதவியது. 1960களில் கிமிசிகே இசிசாகா என்பவரும் உடன் பணிபுரிவோரும் இதனைக் கண்டுபிடித்தனர்.[2]
தூசு, மகரந்தம் போன்ற பல ஒவ்வாப்பொருட்கள் காற்று வழி பரவக்கூடியவை. அதனால், காற்றினோடு தொடர்பு ஏற்படக்கூடிய இடங்களான கண்கள், மூக்கு, நுரையீரல் போன்ற இடங்களில் ஒவ்வாமை விளைவுகள் பெரிதும் காணப்படும். ஒவ்வாமை rhinitis (பொதுவாக வைக்கோல் அரிப்பு (hay fever ?) எனப்படுவது) மூக்குறுத்தல், தும்மல், அரிப்பு, கண்சிவப்பு போன்ற விளைவுகளை ஏற்படுத்த வல்லது. உள்ளிழுத்த ஒவ்வாப்பொருட்கள் ஆஸ்துமாவிற்கான அறிகுறிகளை ஏற்படுத்தும். மூச்சுக் குழாய்கள் சிறுத்துப் போவதும் நெஞ்சுச் சளி அதிகமாவதும், மூச்சுத்திணறல், இருமல், மூச்சிழுப்பு போன்றவை உருவாவதும் இதனால் ஏற்படும்.
இதுபோன்ற புறக்காரணிகளால் அன்றி, சில வகையான உணவுப்பொருட்கள், பூச்சிக்கடி, ஆசுப்பிரின், பெனிசிலின் போன்ற மருந்துகளை உட்கொண்டதன் எதிர்விளைவுகள், என்று பிற காரணங்களுக்காகவும் ஒவ்வாமை விளைவுகள் ஏற்படும்.
உணவு ஒவ்வாமையின் காரணமாக அடிவயிற்று வலி, வயிறு உப்புதல், வாந்தி, பேதி, சரும அரிப்பு, தோல் தடிப்பு போன்ற பல விளைவுகள் ஏற்படலாம். உணவு ஒவ்வாமையால் மூச்சு சார்ந்த பிரச்சினைகள் அதிகம் ஏற்படுவதில்லை. ஆனால், பூச்சிக்கடி, மருந்துப்பொருட்களுக்கான ஒவ்வாமை விளைவுகள் மூச்சு அமைப்பிலும் செரிப்பு அமைப்பிலும் ஏற்பட வாய்ப்புண்டு. சில தீவிர நிலைகளில் குறையழுத்தம், ஆழ்மயக்கம், மட்டுமின்றி சிலசமயம் இறப்புக்கும் காரணமாக அமையும். சருமத்தோடு தொடர்பு கொள்ளும் லேட்டெக்சு போன்ற பொருட்களாலும் சிலருக்கு ஒவ்வாமை விளைவுகள் ஏற்படும். இது பெரும்பாலும் அரிப்பு, தடிப்பு என்று வெளிப்படும்.
பிரிட்டோனோ வேறெந்த மருந்து வகையையுமோ கொடுக்கவேண்டாம்.
ஒவ்வாமை ஏற்பட்ட ஒருவரை விரைவாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இவரைப் பொதுவாக ‘ட’ வடிவில் இருத்தி எடுத்துச் செல்லவேண்டும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.