ஒவ்வாமை
தூசி, தூள் முதலிய ஒவ்வாப் பொருள்களுக்கு உடல் உண்டாக்கும் இயல்பு நீங்கிய தடுப்புத் துலங்கல் / From Wikipedia, the free encyclopedia
உடம்பிற்கு ஒத்துக் கொள்ளாத எதுவாக இருப்பினும் ஒவ்வாமை எனப்படும். ஒவ்வாமை என்பது மனித உடலின் நோய் தடுப்பாற்றல் அமைப்பில் உண்டாகும் கோளாறினால் ஏற்படும் ஒரு நிலையாகும். சூழலில் இருக்கின்ற சில ஒவ்வாப்பொருட்களால் (allergens) ஒவ்வாமை விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. பூச்சிக்கடி போன்றவற்றாலும் உடலில் ஒவ்வாமை விளைவுகள் ஏற்படும்.
ஒவ்வாமையால் அரிப்பு, தடிப்பு, மூக்கொழுகல், தும்மல், கண்களில் நீர்வழிதல் போன்ற விளைவுகள் சாதாரணமாக ஏற்படும். ஆஸ்துமா போன்ற உடல்நலக் கேட்டு நிலைகளுக்கு ஒவ்வாமையும் ஒரு பெருங்காரணமாக அமையும்.