ஒரே ரத்தம்
1987 ஆண்டைய தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
1987 ஆண்டைய தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
ஓரே ரத்தம் (Ore Raththam [3] என்பது 1987 ஆம் ஆண்டய இந்தியத் தமிழ் மொழி திரைப்படம் ஆகும். இப்படத்தை சொர்ணம் இயக்க, மு. கருணாநிதி எழுதியுள்ளார். இப்படத்தில் கார்த்திக், பாக்யலட்சுமி, மாதுரி, கிஷ்மு, மனோரமா, பாண்டியன், சீதா, மு. க. ஸ்டாலின், ராதாரவி ஆகியோர் நடித்துள்ளனர். இது குங்குமம் இதழில் கருணாநிதி தொடர்கதையாக எழுதி வெளிவந்த கதையை அடிப்படையாக கொண்டு அதே பெயரில் எடுக்கபட்ட படமாகும்.
ஒரே ரத்தம் | |
---|---|
இயக்கம் | சொர்ணம்[1] |
தயாரிப்பு | எம். சூரியநாராயணன்[2] |
கதை | மு. கருணாநிதி |
இசை | தேவேந்திரன் |
நடிப்பு | கார்த்திக் பாக்கியலட்சுமி மாதுரி மு. க. ஸ்டாலின் |
ஒளிப்பதிவு | எம். எஸ். அண்ணதுரை[2] |
படத்தொகுப்பு | எல். கேசவன்[2] |
கலையகம் | முரசு மூவிஸ்[1] |
வெளியீடு | 8 மே 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஒரே ரத்தம் என்பது குங்குமம் இதழில் தொடர்கதையாக வெளிவந்த ஒரு கதை ஆகும். இதை மு. கருணாநிதி எழுதினார். அதை அதே பெயரில் திரைப்படமாக முரசு மூவிஸ் நிறுவனம் சார்பில் எம். சூரியநாராயணன் தயாரித்துள்ளார். மு. க. ஸ்டாலின் இந்த படத்தின் மூலம் திரைப்பட நடிகராக அறிமுகமானார்.
படத்திற்கான இசையை தேவேந்திரன் மேற்கொண்டார்.[6]
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "ஒரே ரத்தம்தான் ஓடுது" | தேவேந்திரன் | 4:08 | |
2. | "ஒரு போராளியின் பயணம் இது" | தேவேந்திரன் | 3:11 |
ஒரே ரத்தம் 8 மே 1987 அன்று வெளியிடப்பட்டது.[1] தி இந்தியன் எக்ஸ்பிரஸின் என். கிருஷ்ணசாமி இந்தப் படத்தின் கதை, உரையாடல், பின்னணி இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியவற்றை பாராட்டினார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.