ஒசூர்
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் தொழிற் நகரம் மற்றும் மாநகராட்சி ஆகும் / From Wikipedia, the free encyclopedia
ஒசூர் (Hosur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒசூர் வருவாய் கோட்டம் மற்றும் ஒசூர் மாநகராட்சியின் தலைமையிடம் ஆகும். இந்நகரம் சென்னையிலிருந்து 306 கிலோமீட்டர் தொலைவிலும், பெங்களூர் நகரத்தில் இருந்து 40 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த நகரம் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில எல்லைப் பகுதியில் உள்ளது. இந்நகரம் பெருகி வரும் சிறு, குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகளாலும், குளிர்ந்த தட்பவெப்பநிலையாலும் அறியப்படுகிறது.
விரைவான உண்மைகள் ஒசூர் செவிடபாடி, நாடு ...
ஒசூர்
செவிடபாடி | |
---|---|
அடிவானப் பின்னணியில் ஒசூர் நகரம் | |
ஆள்கூறுகள்: 12.740900°N 77.825300°E / 12.740900; 77.825300 | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | ஒசூர் மாநகராட்சி |
• துணை ஆட்சியர் | சரண்யா இ.ஆ.ப. |
பரப்பளவு | |
• மொத்தம் | 190.3 km2 (73.5 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 7 |
ஏற்றம் | 889 m (2,917 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 5,03,216 |
• அடர்த்தி | 2,600/km2 (6,800/sq mi) |
இனம் | ஒசூர்காரர் |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
• மற்றவை | தெலுங்கு, கன்னடம்[2] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635 109, 635 110, 635 126, 635 117, 635 129 |
தொலைபேசிக் குறியீடு | 04344[3] |
வாகனப் பதிவு | TN 70 |
பாலின விகிதம் | 1.118 ♂/♀ |
மேயர் | எஸ். ஏ. சத்யா |
மூடு