![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/72/Okavango_River_Sign.jpg/640px-Okavango_River_Sign.jpg&w=640&q=50)
ஒக்கவாங்கோ ஆறு
From Wikipedia, the free encyclopedia
ஒக்கவாங்கோ ஆறு (Okavango River) தென்மேற்கு ஆப்பிரிக்காவில் அங்கோலா நாட்டின் பீடபூமியில் உற்பத்தியாகி, 1,600 கிலோமீட்டர்கள் (990 மைல்கள்) பயணித்து தென்கிழக்கு ஆப்பிரிக்காவின் கலகாரிப் பாலைவன மையப்பகுதியில் கழிமுகமாக டெல்டாவாக மாறும் ஆறு ஆகும். ஆப்பிரிக்காவின் தெற்கே நான்காவது நீளமான ஆறாக விளங்கும் இது அங்கோலாவில் ஆரம்பமாகின்றது. அங்கோலாவின் இது குபாங்கோ ஆறு (Cubango River) என அழைக்கப்படுகிறது.[1]
விரைவான உண்மைகள் நாடுகள், நீளம் ...
ஒக்கவாங்கோ ஆறு | |
Okavango River | |
போட்சுவானாவிலிருந்து நமீபியாவிற்கு ஒக்கவாங்கோ ஆற்றில் ஒரு படகு கடக்கும் காட்சி. | |
நாடுகள் | அங்கோலா, நமீபியா, போட்சுவானா |
---|---|
நீளம் | 1,700 கிமீ (1,056 மைல்) |
வடிநிலம் | 5,30,000 கிமீ² (2,04,634 ச.மைல்) |
Discharge | |
- சராசரி | |
- மிகக் கூடிய | |
- மிகக் குறைந்த | |
மூடு
பொதுவாக ஆறுகள் இறுதியாக கடலில் கலப்பதுதான் இயல்பு ஆனால் ஒக்கவாங்கோ ஆறு, மற்ற ஆறுகளைப்போல் கடலில் சங்கமிக்காமல் மாறாக கலகாரிப் பாலைவனத்தில் ஒரு கழிமுகமாக மாறிவிடும் ஆறாக உள்ளது. மேலும் இவ்வாறு, தெற்கு அங்கோலாவிற்கும், நமீபியாவிற்கும் ஒரு எல்லைக் கோடாக அமைந்ததோடு போட்சுவானாவில் பாய்கிறது.[2]