ஐதரோபுளோரிக் அமிலம்
From Wikipedia, the free encyclopedia
ஐதரோபுளோரிக் அமிலம் (Hydrofluoric acid) நீரில் ஐதரசன் புளோரைடின் (HF) கரைசல் ஆகும். இச்சேர்மமானது புளோக்செடின் (புரோசேக்) போன்ற மருந்துச் சேர்மங்கள், டெஃப்லான், தனிம நிலை புளோரின் உள்ளிட்ட அனைத்து புளோரின் சேர்மங்களின் முன்னோடிச் சேர்மமாகும். இச்சேர்மம், நிறமற்ற, மிகுதியான அரிக்கும் தன்மையுடைய, பலவிதமான பொருட்களை (குறிப்பாக ஆக்சைடுகளை) கரைக்கும் தன்மையுடைய திரவமாகும். 1771 ஆம் ஆண்டில், காரல் வில்லெம் சீலெ இச்சேர்மத்தை அதிகளவில் தயாரிக்கத் தொடங்கும் முன்பே 17 ஆம் நுாற்றாண்டில் கண்ணாடியைக் கரைக்கும் திறனைக் கொண்டிருந்தது அறியப்பட்டிருந்தது.[2] கண்ணாடியுடனான இதன் அதிக வினைத்திறன் காரணமாகவும், பல உலோகங்களுடனான மிதமான வினைத்திறன் காரணமாகவும் இந்த அமிலமானது நெகிழி கொள்கலன்களில் சேமித்து வைக்கப்படுகிறது. (டெஃப்லானிலும் இலேசாக உட்புகும் தன்மை கொண்டது).
| |||
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
வேறு பெயர்கள்
புளோரோஐதரிக் அமிலம் ஐதரோனியம் புளோரைடு | |||
இனங்காட்டிகள் | |||
7664-39-3 Y | |||
ChEBI | CHEBI:29228 Y | ||
ChemSpider | 14214 Y | ||
EC number | 231-634-8 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 14917 | ||
வே.ந.வி.ப எண் | MW7875000 | ||
| |||
UNII | RGL5YE86CZ Y | ||
பண்புகள் | |||
HF (நீரிய) | |||
வாய்ப்பாட்டு எடை | பொருந்தாது (பார்க்க ஐதரசன் புளோரைடு) | ||
தோற்றம் | நிறமற்ற கரைசல் | ||
அடர்த்தி | 1.15 கி/மிலி (48% கரைசலுக்கானது) | ||
உருகுநிலை | பொருந்தாது (பார்க்க ஐதரசன் புளோரைடு) | ||
கொதிநிலை | பொருந்தாது (பார்க்க ஐதரசன் புளோரைடு) | ||
கலக்குமியல்புடையது | |||
காடித்தன்மை எண் (pKa) | 3.17[1] | ||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | duPont MSDS | ||
GHS pictograms | |||
GHS signal word | அபாயம் | ||
H280, H300, H310, H314, H318, H330 | |||
P260, P262, P264, P270, P271, P280, P284, P301+310, P301+330+331, P302+350, P303+361+353, P304+340, P305+351+338, P310 | |||
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாதது | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | ஐதரோகுளோரிக் அமிலம் ஐதரோபுரோமிக் அமிலம் ஐதரயோடிக் அமிலம் | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
ஐதரசன் புளோரைடு வாயுவானது உடனடியாகவும், நிலையாகவும் நுரையீரல்கள், கண்விழிப் படலம் மற்றும் கண்களை பாதிக்கவல்ல கொடிய நச்சுத்தன்மை வாய்ந்தது ஆகும். நீரிய ஐதரோபுளோரிக் அமிலமானது ஆழமான, வலியற்ற தீக்காயங்கள் மற்றும் திசு இறப்பு நிகழும் காயங்கள் ஆகியவற்றுடன் தொடு நச்சாக உள்ளது. உடலின் கால்சிய வளர்சிதை மாற்றத்துடன் இடைவினையில் ஈடுபடும் போது, அடர் அமிலமானது, 160 சதுர செ.மீ(25 சதுர அங்குலம்) அளவிற்குத் தோலுடன் தொடர்புகொள்ளும்போது அமைப்புரீதியான நச்சுத்தன்மையை உருவாக்கி இறுதி விளைவாக இதய நிறுத்தம் மற்றும் மரணத்தை உண்டாக்குகின்றது.