![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a6/Hydroxychloroquine.svg/langta-640px-Hydroxychloroquine.svg.png&w=640&q=50)
ஐதராக்சிகுளோரோகுயின்
வேதிச் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
ஐதராக்ஸிகுளோரோகுயின் (HCQ), இது பொதுவாக ப்ளேகுவானில் என்ற வணிகப் பெயரில் விற்பனை செய்யப்படும் மருந்தாகும். இது மலேரியா குளோரோகுயினுக்கு கட்டுப்படும் தன்மை உள்ள பகுதிகளில் மலேரியா வராமல் தடுப்பதற்கும், மலேரியா வந்த பிறகு சிகிச்சையளிப்பதற்கும் பயன்படும் மருந்துப் பொருளாக உள்ளது.[1] முடக்கு வாதம், லூபஸ் மற்றும் போர்பிரியா கட்னேனியா டார்டா சிகிச்சை ஆகியவை பிற பயன்பாடுகளில் அடங்கும். இது வாய் வழியாக உட்கொள்ளப்படும் மருந்தாகும். கொரோனா வைரஸ் தொற்று 2019 (COVID-19) க்கான சிகிச்சையில் மருந்துப்பொருளாகவும் இது ஆய்வு செய்யப்படுகிறது.[2][3]
![]() | |
---|---|
![]() | |
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
(RS)-2-[{4-[(7-குளோரோகுயினோலின்-4-ஐல்)அமினோ]பென்டைல்}(எதில்)அமினோ]எதனால் | |
மருத்துவத் தரவு | |
வணிகப் பெயர்கள் | பிளேக்நில் |
AHFS/திரக்ஃசு.காம் | ஆய்வுக் கட்டுரை |
மெட்லைன் ப்ளஸ் | a601240 |
கட்டுப்பாட்டு உரிமத் தரவு | US Daily Med:link |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | D(AU) ?(US) |
சட்டத் தகுதிநிலை | Prescription Only (S4) (AU) POM (UK) ?-only (அமெரிக்கா) ? Prescription only |
வழிகள் | வாய்வழி, (மாத்திரைகள்) |
மருந்தியக்கத் தரவு | |
உயிருடலில் கிடைப்பு | மாறுபடுவீதம் (74% சராசரியாக); Tmax = 2–4.5 மணி நேரங்கள் |
புரத இணைப்பு | 45% |
வளர்சிதைமாற்றம் | கல்லீரல் |
அரைவாழ்வுக்காலம் | 32–50 நாள்கள் |
கழிவகற்றல் | பெரும்பாலும் சிறுநீரகம் (மாற்றமேதும் ஏற்படாத மருந்துப்பொருளாக 23–25% ), மற்றும் பித்தநீர் (<10%) |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 118-42-3 ![]() |
ATC குறியீடு | P01BA02 |
பப்கெம் | CID 3652 |
IUPHAR ligand | 7198 |
DrugBank | DB01611 |
ChemSpider | 3526 ![]() |
UNII | 4QWG6N8QKH ![]() |
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் | D08050 ![]() |
ChEBI | ![]() |
ChEMBL | CHEMBL1535 ![]() |
ஒத்தசொல்s | ஐதராக்சிகுளோரோகுயின் சல்பேட்டு |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C18 |
மூலக்கூற்று நிறை | 335.872 கி/மோல் |
இந்த மருந்தின் பொதுவான பக்க விளைவுகளில் வாந்தி, தலைவலி, பார்வையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் தசை பலவீனம் ஆகியவை அடங்கும்.[1] கடுமையான பக்க விளைவுகளில் ஒவ்வாமை, பார்வைக் குறைபாடுகள் மற்றும் இதய பிரச்சினைகள் ஆகியவையாக உள்ளன.[4] எல்லா ஆபத்துகளையும் விலக்க முடியாது என்றாலும், கர்ப்ப காலத்தில் வாத நோய்க்கு இது ஒரு சிகிச்சையாக உள்ளது.[5] ஐதராக்சிகுளோரோகுயின் மலேரியா எதிர்ப்பு மற்றும் 4-அமினோகுயினோலின் மருந்துகளின் குடும்பத்தைச் சார்ந்ததாக உள்ளது.
ஐதராக்ஸிகுளோரோகுயின் 1955ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மருத்துவ பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்பட்டது.[1] இது உலக சுகாதார அமைப்பின் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் உள்ள தேவைப்படும் பாதுகாப்பான மற்றும் மிகவும் பயனுள்ள மருந்துப் பொருளாகும்.[6] 2017 ஆம் ஆண்டில், ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மருத்துவச் சீட்டுகளின் அடிப்படையிலான ஆய்வில், அமெரிக்காவில் பொதுவாக பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் பட்டியலில் 128 வது இடத்தைப் பெற்ற மருந்தாகும்.[7][8]