![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/23/Bartgeier_Gypaetus_barbatus_front_Richard_Bartz.jpg/640px-Bartgeier_Gypaetus_barbatus_front_Richard_Bartz.jpg&w=640&q=50)
எலும்புண்ணிக் கழுகு
From Wikipedia, the free encyclopedia
எலும்புண்ணிக் கழுகு அல்லது எலும்புண்ணிப் பாறு (Lammergeier அல்லது Gypaetus barbatus) உயர் மலைப்பகுதிகளில் வாழும் பெரும் பிணந்தின்னிவகைக் கழுகுகளில் ஒன்று. இந்தியாவின் வடபகுதியிலும், திபெத், ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்கா தென் ஐரோப்பா ஆகிய இடங்களிலும் உள்ள மலைப்பகுதிகளில் வாழ்கின்றது. எலும்புண்ணிப் பாறு, தான் உண்ணும் உணவில் 85% எலும்பாக இருப்பதால்[2] இது எலும்புண்ணிக்கழுகு அல்லது எலும்புண்ணிப்பாறு என்று அழைக்கப்படுகின்றது. இப்பாறு அறிவியல் வகைப்பாட்டில் கழுகுவரிசையில் (Falconiformes, `வால்க்கனி`வார்ம்ஸ்) ஆக்ஸிபிட்ரிடீ (Accipitridae) என்னும் குடும்பத்தில், ஜிப்பீட்டஸ் (Gypaetus) என்னும் பேரினத்தில், எலும்புண்ணிப் பாறு (ஜிப்பீட்டஸ் பார்பேட்டஸ், Gypaetus barbatus) என்னும் இனம் ஆகும்.
விரைவான உண்மைகள் எலும்புண்ணிக் கழுகு, காப்பு நிலை ...
எலும்புண்ணிக் கழுகு | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | ஆக்சிபிட்ரிடே |
பேரினம்: | ஜிப்பேட்டசு ஸ்டோர், 1784 |
இனம்: | ஜி. பார்பேடசு |
இருசொற் பெயரீடு | |
ஜிப்பேட்டசு பார்பேடசு (லின்னேயசு, 1758) | |
![]() | |
உலகில் இன்று எலும்புண்ணிப் பாறு வாழும் பகுதிகள் பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. இத்தாலியின் வடக்கே சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ள பகுதிகளில் மீண்டும் இப்பறவை கொண்டுவிடப்பட்டுள்ளது. |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0d/Lammergeier_I_IMG_7021.jpg/640px-Lammergeier_I_IMG_7021.jpg)