![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5e/MG_Sreekumar_%2528Cropped%2529.jpg/640px-MG_Sreekumar_%2528Cropped%2529.jpg&w=640&q=50)
எம். ஜி. ஸ்ரீகுமார்
தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் / From Wikipedia, the free encyclopedia
எம்.ஜி. ஸ்ரீகுமார் (M. G. Sreekumar), (பிறப்பு: மே 25, 1958) மலையாள படவுலகில்,இரண்டு முறை தேசிய விருது பெற்ற இந்திய பின்னணிப் பாடகர் மற்றும் இசை இயக்குனர் ஆவார். 44 ஆண்டுகளாக பாடி வரும் இவர்,[1][2] மலையாளம் , தமிழ் , தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பாடியுள்ளார். இவர், இசையமைப்பாளர் எம்.ஜி. ராதாகிருஷ்ணன் மற்றும் பாடகி கே. ஓமனகுட்டி ஆகியோரின் இளைய சகோதரர் ஆவார். இவர், கே.எம்.ஜி மியூசிக்ஸ் என்ற இசை நிறுவனத்தையும், மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள பூஜப்புராவில் சரிகம என்கிற பெயரில் இசைப் பள்ளியையும் நடத்தி வருகிறார்.
விரைவான உண்மைகள் எம். ஜி. ஸ்ரீகுமார், பின்னணித் தகவல்கள் ...
எம். ஜி. ஸ்ரீகுமார் | |
---|---|
![]() | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | எம். ஜி. ஸ்ரீகுமார் |
பிறப்பு | 25 மே 1957 (1957-05-25) (அகவை 67) ஹரிப்பாடு, கேரளம், இந்தியா |
தொழில்(கள்) | பின்னணிப் பாடகர், வங்கி ஊழியர், இசை இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர் |
இசைத்துறையில் | 1983முதல் தற்போது வரை |
இணையதளம் | mgsreekumar |
மூடு