![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5c/HenriettaSwope1925.png/640px-HenriettaSwope1925.png&w=640&q=50)
என்றியேட்டா கில் சுவோப்
From Wikipedia, the free encyclopedia
என்றியேட்ட கில் சுவோப் (Henrietta Hill Swope) (அக்தோபர் 26, 1902 – நவம்பர் 24, 1980)[2] ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் மாறும் விண்களைப் பற்றி ஆய்வு செய்தார். குறிப்பாக, செபீடு விண்மீன்களுக்கான அலைவுநேரம்-ஒளிர்மை உறவை அளந்தார். இவை தம் இயல்பு ஒளிர்மைக்கு நேர்விகிதத்தில் மாறும் அலைவுநேரம் கொண்ட மிகவும் பொலிவான மாறும் விண்மீன்கள் ஆகும். இவற்றின் அலைவுநேர அளவீடுகள் அவற்ரின் தொலைவுகளோடு உறவுள்ளவை. எனவே இத்தொலைவுகளை வைத்து பால்வழியின் உருவளவையும் அதிலிருந்தான மற்ற பால்வெளிகளின் தொலைவுகளையும் கண்டறியலாம்.
விரைவான உண்மைகள் என்றியேட்டா கில் சுவோப்Henrietta Hill Swope, பிறப்பு ...
என்றியேட்டா கில் சுவோப் Henrietta Hill Swope | |
---|---|
![]() | |
பிறப்பு | (1902-10-26)அக்டோபர் 26, 1902 புனித உலூயிசு, மிசவுரி |
இறப்பு | நவம்பர் 24, 1980(1980-11-24) (அகவை 78) இலாசு ஏஞ்சலீசு, கலிபோர்னியா[1] |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | கார்னிகி அறிவியல் நிறுவனம் |
அறியப்படுவது | பால்வெளிகளின் தொலைவுகள் |
விருதுகள் | வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது]] (1968) |
மூடு