![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/30/135-BVolo_Delta_2006_12_24_009.jpg/640px-135-BVolo_Delta_2006_12_24_009.jpg&w=640&q=50)
எசினோ லாரியோ
From Wikipedia, the free encyclopedia
எசினோ லாரியோ (Esino Lario) இத்தாலியின் லோம்பார்டி மண்டலத்தில் லெக்கோ மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் நகராட்சி (கம்யூன்) ஆகும். இது மிலன் நகருக்கு வடக்கே 60 கிலோமீட்டர்கள் (37 mi) தொலைவிலும் லெக்கோவிற்கு வடகிழக்கில் 15 கிலோமீட்டர்கள் (9.3 mi) தொலைவிலும் கோமோ ஏரியின் கிழக்குக் கரையிலிருந்து ஏறத்தாழ 4.3 கிலோமீட்டர்கள் (2.7 mi) தொலைவிலும் அமைந்துள்ளது. திசம்பர் 31, 2004 நிலவரப்படி எசினோவின் மக்கள்தொகை 772ஆக இருந்தது. இந்த ஊரின் பரப்பளவு 18.7 சதுர கிலோமீட்டர்கள் (7.2 sq mi) ஆகும்.[2] எசினோ லாரியோ நகராட்சியில் பிகல்லோ, ஓர்டனெல்லா நிர்வாகப் பிரிவுகள் அடங்கியுள்ளன.
![விக்கிமேனியா 2016 சின்னம்](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fa/Squared_logo_of_Wikimania_Esino_Lario.jpg/640px-Squared_logo_of_Wikimania_Esino_Lario.jpg)
எசினோ லாரியோ | |
---|---|
கொம்யூன் | |
கம்யூன் டி எசினோ லாரியோ | |
![]() மேலிருந்து எசினோ லாரியோவின் காட்சி | |
![]() லெக்கோ மாநிலத்தில் அமைவிடம் | |
நாடு | இத்தாலி |
மண்டலம் | லோம்பார்டி |
மாகாணம் | லெக்கோ மாநிலம் (LC) |
Frazioni | பிகல்லோ, ஓர்டனெல்லா |
பரப்பளவு | |
• மொத்தம் | 18.7 km2 (7.2 sq mi) |
ஏற்றம் | 913 m (2,995 ft) |
மக்கள்தொகை (சன. 2014)[1] | |
• மொத்தம் | 760 |
இனம் | எசினெசியர்கள் |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
அஞ்சல் குறியீடு | 23825 |
Dialing code | 0341 |
பாதுகாவல் புனிதர் | சான் விட்டோர் மார்ட்டைர் செட் மாரிடானோ |
புனிதர் நாள் | மே 8 |
இணையதளம் | Municipal website |
தொல்லியல் பதிவுகள் இங்குள்ள குடியேற்றத்தின் துவக்க காலத்தை ஆவணப்படுத்தியுள்ளன. எசினோ லாரியோவைச் சுற்றிலும் ஆல்ப்சு மலைத்தொடர் குன்றுகள் சூழ்ந்துள்ளன. இங்கு தொல்லியல் எச்சங்கள், குகைகள் காணப்படுகின்றன; இவற்றில் மொன்கொடேனோவின் குளிர்பெட்டி ( Icebox of Moncodeno) மிகவும் பிரபலமானது.
இந்த ஊரில் ஆண்டுதோறும் நடைபெறும் விக்கிமீடியா மாநாடான விக்கிமேனியா நிகழ்வு சூன், 2016இல் நடைபெற்றது.[3]