From Wikipedia, the free encyclopedia
உலக வானொலி நாள் (World Radio Day) என்பது ஆண்டு தோறும் பெப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெசுக்கோ) 2011 நவம்பர் 3 ஆம் நாள் உலக வானொலி நாளாக அறிவித்தது.[1] வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், முடிவெடுப்பவர்களை வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.[2]
உலக வானொலி நாள் World Radio Day Día Mundial de la Radio | |
---|---|
பன்னாட்டு வானொலிக் குழுவினால் அங்கீகாரம் பெற்ற உலக வானொலி சின்னம் | |
கடைபிடிப்போர் | ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள் |
நாள் | 13 பெப்ரவரி |
நிகழ்வு | ஆண்டுக்கு ஒரு நாள் |
முதலாவது உலக வானொலி நாள் இத்தாலியில் அமைந்துள்ள பீசா பல்கலைக்கழகத்தில் 2012 பெப்ரவரி 13 இல் கொண்டாடப்பட்டது. வானொலிகளின் மூலம் குறைந்த செலவில் தகவல்களை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமென்பதே இதன் நோக்கமாகும்.[3]
யுனெசுக்கோ அமைப்பின் யோசனைப்படி, 2014ஆம் ஆண்டுக்கான உலக வானொலி நாளின் தொனிப்பொருளாக பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களை வானொலி மூலம் வலுவூட்டுவது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
2018ஆம் ஆண்டுக்கான தொனிப்பொருள் வானொலியும் விளையாட்டும் ஆகும்.
2023ம் ஆண்டுக்கான உலக வானொலி தினத்தின் கருப்பொருளாக ‘வானொலி மற்றும் அமைதி’ அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் அமைதியை நிலைநாட்டுவதில் வானொலியின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இக்கருப்பொருள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.