உயிர்வளிக்கோராப் பயிற்சி
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
உயிர்வளிக்கோரா பயிற்சி (Anaerobic exercise) இலாக்டேட்டு உருவாகுமளவில் தீவிரமாகச் செய்யப்படும் உடற் பயிற்சி ஆகும். தாங்காற்றல் தேவையற்ற விளையாட்டுக்களில் பங்கேற்கும் மெய்வல்லுநர்களுக்கு இது பயனாகின்றது; உடல் வலிவைக் கூட்டவும் விரைவையும் ஆற்றலையும் மேம்படுத்தவும் பயனாகின்றது. உடற்கட்டை கட்டமைப்பவர்களுக்கும் தசைத்திறளை வளர்க்க இப்பயிற்சி உதவுகின்றது. உயிர்வளிக்கோரா பயிற்சிகள் மூலம் வளர்க்கப்படுத் தசையாற்றல் அமைப்புகள் உயிர்வளிக்கோரும் பயிற்சிகள் மூலம் வளர்க்கப்படுவதிலிருந்து வேறுபடுகின்றன; குறைந்த கால இடைவெளியில் பெரும் திறனைக் காட்டக்கூடியதாக உள்ளன. சில வினாடிகளிலிருந்து 2 நிமிடம் வரை இவை நீடிக்கக் கூடும்.[1] இரண்டு நிமிடத்திற்கும் கூடுதலாக நீடித்திருக்க வேண்டிய பயிற்சிகளில் பொதுவாக உயிர்வளிக்கோரும் வளர்சிதைமாற்றத்தின் கூறு கூடுதலாகவிருக்கும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.