Remove ads
From Wikipedia, the free encyclopedia
உயிர்வளிக்கோரும் பயிற்சி (Aerobic exercise) அல்லது இதயப் பயிற்சி (cardio) ஆற்றலை-உருவாக்க உயிர்வளியைக் கோரும் செயல்முறையை முதன்மையாகக் கொண்ட உடற் பயிற்சி ஆகும்; இது குறைந்தளவு முதல் உயரளவு வரை தீவிரமானதாயிருக்கலாம்.[1] இதனைக் குறிப்பிடும் ஆங்கிலச் சொல்லான ஆரோபிக் என்பதற்கு பொதுவாக "கட்டற்ற உயிர்வளித் தேவைப்படுகின்ற அல்லது தொடர்புடைய" எனப் பொருள்படும்.[2] இந்தப் பயிற்சிகளின் போது ஆற்றல் தேவைகளை நிறைவேற்ற கணிசமான அளவில் ஆக்சிசன் பயன்படுத்தப்படுகின்றது.[3] பொதுவாக, உயிரளவில் பயிற்சி செய்யாது, உயிர்வளிக் கோரும் வளர்சிதைமாற்றம் போதுமான அளவில் ஆதரவளிக்கும் இலகு முதல் மிதமான தீவிரமுள்ள பயிற்சிகள் நீண்ட நேரம் நிகழ்த்தப்படுகின்றன.[1]
இத்தகைய அளவில் மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் இடைதூரம் முதல் நீள்தொலைவு வரையிலான ஓட்டம்/மெதுவோட்டம், நீச்சல், மிதிவண்டியோட்டுதல், நடத்தல் ஆகியனவாம்.[4][5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.