![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1f/Location_map_Unalaska.png/640px-Location_map_Unalaska.png&w=640&q=50)
உனலாசுக்கா தீவு
From Wikipedia, the free encyclopedia
உனலாசுக்கா (Unalaska, Nawan-Alaxsxa,[1] உருசியம்: Унала́шка) என்பது அமெரிக்க மாநிலமான அலாசுக்காவில் அமைந்துள்ள ஓர் உயர் தீவு ஆகும். இது அலூசியன் தீவுகளில் பொக்சு தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ளது. இத்தீவின் நிலப்பரப்பு 1,051 சதுர மைல்கள் (2,720 கிமீ2) ஆகும். இதன் நீளம் 79.4 மைல் (127.8 கிமீ), அகலம் 34.7 மைல் (55.8 கிமீ) ஆகும். இத்தீவின் நகரம் உனலாசுக்கா தீவின் ஒரு பகுதியையும், அயலில் உள்ள அமக்நாக் தீவின் முழுப் பகுதியையும் கொண்டுள்ளது. அமக்நாக் தீவில் இடச்சுத் துறைமுகம் அமைந்துள்ளது. உனலாசுக்கா தீவின் மக்கள்தொகை 2000 ஆம் ஆண்டு தகவலின்படி (அமக்நாக் தீவைத் தவிர்த்து) 1,759 ஆகும்.
உள்ளூர் பெயர்: Nawan-Alaxsxa[1] | |
---|---|
![]() தீவின் வரைபடம் | |
அலாசுக்காவில் உனலாசுக்காவின் அமைவிடம் | |
புவியியல் | |
அமைவிடம் | அலூசியத் தீவு தீவுக்கூட்டம், அமெரிக்கா மற்றும் உருசியா |
ஆள்கூறுகள் | 53°40′24″N 166°38′54″W |
தீவுக்கூட்டம் | பொக்சு தீவுகள் |
முக்கிய தீவுகள் | உனலாசுக்கா |
பரப்பளவு | 1,051 sq mi (2,720 km2) |
நீளம் | 128 km (79.5 mi) |
அகலம் | 56 km (34.8 mi) |
உயர்ந்த ஏற்றம் | 6,680 ft (2,036 m) |
உயர்ந்த புள்ளி | மக்கூசின் மலை |
நிர்வாகம் | |
ஐக்கிய அமெரிக்கா | |
மக்கள் | |
மக்கள்தொகை | 5,638 |
அடர்த்தி | 1.83 /km2 (4.74 /sq mi) |
உனலாசுக்கா தீவு பொக்சு தீவுகள், அலூசியன் தீவுகளில் இரண்டாவது பெரிய தீவு ஆகும். உனலாசுக்காவின் கடற்கரை ஏனைய பெரிய அலூசியன் தீவுகளை விட தோற்றத்தில் குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டது, இங்கு ஏராளமான நுழைவாயில்களும், மூவலந்தீவுகளும் உள்ளன. இந்த ஒழுங்கற்ற கடற்கரை பீவர் கழிமுகம், உனலாசுக்கா விரிகுடா, மக்கூசின் விரிகுடா ஆகிய ஆழமான விரிகுடாக்களாலும், மற்றும் பல சிறிய விரிகுடாக்களாலும் உடைக்கப்பட்டுள்ளது. உனலாஸ்காவின் நிலப்பரப்பு சமதளமற்ற கரடுமுரடானதும், மலைகளால் மூடப்பட்டும் இருக்கும், அத்துடன் ஆண்டின் பெரும்பகுதியில், உயரமான பகுதிகள் பனியால் மூடப்பட்டிருக்கும்.[2] உனலாசுக்காவின் மிக உயர்ந்த புள்ளி மக்கூசின் மலை செயற்பாட்டில் உள்ள ஓர் எரிமலை ஆகும்.
உனலாசுக்கா என்பது தீவின் அலூசிய மொழிப் பெயர் ஆகும். இப்பெயரின் தோற்றம் பற்றி பல கோட்பாடுகள் உள்ளன; பெரும்பாலும், இப்பெயர் உருசிய மொழிச் சொல்லான ஊனலாசுக்கா என்பதிலிருந்து உருவானது, இது முக்கிய நிலப்பகுதிக்கு அருகில் உள்ள நவன் அலாசுக்காசின் அலூட் மொழிச் சொல்லின் தழுவலாகும்.