From Wikipedia, the free encyclopedia
உக்ரைனின் தேசியக் கொடி (உக்ரைனியன்: Державний прапор України) நீலம், மஞ்சள் ஆகிய நிறங்களின் சம அளவிலான கிடைமட்ட பட்டைகள் கொண்டது.
நீலம், மஞ்சள் ஆகிய வண்ணங்கள் முதன்முதலில் 1848 ஆம் ஆண்டு ஆசுதிரியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த லெம்பெர்க்கில் தோன்றின. உருசியப் புரட்சிக்கு பின்னர், உக்ரேனிய மக்கள் குடியரசு, மேற்கு உக்ரேனிய மக்களாட்சிக் குடியரசு, உக்ரேனிய அரசு ஆகியவற்றால் இது முதல் முறையாக மாநிலக் கொடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது பின்னர் மார்ச் 1939 இல் கார்பத்தோ-உக்ரைனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. உக்ரைன் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்தபோது, இரு வண்ணக் கொடி தடைசெய்யப்பட்டது, மேலும் அது உக்ரேனிய சோவியத் குடியரசின் கொடியைப் பயன்படுத்தியது. அதில் சிவப்பு, நீலம் ஆகிய நிறங்களும், தங்க சுத்தி, அரிவாள், மேலே தங்க எல்லை கொண்ட சிவப்பு நட்சத்திரம் ஆகியவை இடம்பெற்றிருந்தன.
சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டபோது, இரு வண்ணக் கொடி படிப்படியாக பயன்பாட்டிற்குத் திரும்பியது. 1990 இல் கீவ் சதுக்கத்தில் உள்ள அதிகாரப்பூர்வ கீவ் நகர சபை அரசாங்க கட்டிடத்தின் மீது மஞ்சள் மற்றும் நீல கொடி முதன்முறையாக பறக்கவிடப்பட்டது. 24 ஆகத்து 1991 அன்று உக்ரைன் சுதந்திரப் பிரகடனத்திற்குப் பிறகு, தேசிய மஞ்சள் மற்றும் நீலக் கொடி முதன்முறையாக உக்ரேனிய நாடாளுமன்றத்தின் (வெர்கோவ்னா ராடா) கட்டிடத்தின் மீது பறந்தது. சுதந்திரத்தைத் தொடர்ந்து ஆகத்து 1991 இல் நீல மற்றும் மஞ்சள் கொடி தற்காலிகமாக அதிகாரப்பூர்வ விழாக்களுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் 1992 சனவரி 28 அன்று உக்ரேனிய நாடாளுமன்றத்தால் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. உக்ரைன் 2004 ஆம் ஆண்டு முதல் ஆகத்து 23 அன்று தேசிய கொடி தினத்தை கொண்டாடுகிறது.
உக்ரேனிய சட்டத்தின் படி, உக்ரேனிய நாடு கொடியின் நிறங்கள் "நீலமும் மஞ்சளும்" ஆகும். [1] உக்ரைன் நாட்டின் அமைச்சரவை 2021 ஆம் ஆண்டு தேசியக் கொடிகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான தரத்தைக் கட்டாயமாக்கியது.[2] இந்தக் கொடியில் பயன்படுத்தப்படும் நீல நிறம் குறித்து பல கருத்து வேறுபாடுகள் உள்ளன. அடர் நீலம், வான நீலம் ஆகிய இரண்டும் வரலாற்று ரீதியாக இவற்றில் பயன்படுத்தப்பட்டன. 1992 இல் தேசியக்கொடி அங்கீகரிக்கப்பட்டபோது, வான நீல கொடிகள் சூரியனில் மிக விரைவாக மங்கிவிடும் என்ற நடைமுறை காரணங்களுக்காக அடர் நீல நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதிகாரப்பூர்வ நிற மற்றும் தரநிலை 2006 இல் அறிமுகப்படுத்தப்பட்டாலும், சில உற்பத்தியாளர்கள் அதற்கு உட்படாமல் மாறுபட்ட கொடிகளை உற்பத்தி செய்கின்றனர்.[3]
இந்தக் கொடியானது ஆஸ்திரிய மாநிலமான கீழ் ஆஸ்திரியா, ஜெர்மானிய நகரமான கெம்னிட்ஸ், வரலாற்று இராச்சியமான டால்மேசியா (இப்போது குரோஷியா), அங்கேரிய நகரமான பெக்ஸ் ஆகிய இடங்களில் பயன்படுத்தப்படும் கொடிகளைப் போலவே உள்ளது. ஆனால் இவைகளில் வெவ்வேறு நீல நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இந்த கொடியானது மலேசிய மாநிலமான பெர்லிசு, பிரித்தானிய மாவட்டமான டர்காம் ஆகிய இடங்களில் பயன்படுத்தப்படும் கொடிகளுடன் ஓரளவு ஒத்திருக்கிறது. ஆனால் இந்தக் கொடிகள் இலகுவான நீலம், மஞ்சள், பிற வேறுபட்ட தோற்ற விகிதம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
உக்ரைன் நாட்டு அரசியலமைப்பின் 20வது பிரிவு "உக்ரைனின் கொடி நீலம் மஞ்சள் ஆகிய இரண்டையும் சம அளவில் கொண்ட கிடைமட்டப் பட்டைகளின் பதாகையாகும்" என்று கூறுகிறது.[6]
சாதாரணமாக பயன்படுத்தப்படும் கிடைமட்ட வடிவத்துடன் கூடுதலாக, வெர்கோவனா ராடா போன்ற பல பொதுக் கட்டிடங்களில் செங்குத்தான வடிவம் கொண்ட கொடிகளைப் பயன்படுத்துகின்றன. உக்ரைனில் உள்ள சில நகரக் கொடிகள் செங்குத்து வடிவத்தில் மட்டுமே உள்ளன. எனவே பெரும்பாலான நகர அமைப்புகள் தங்கள் நகரக் கொடியை தேசியக் கொடியுடன் இவ்வாறு பறக்கவிடுகின்றன. இந்த செங்குத்து வடிவ கொடிகளின் விகிதாச்சாரங்கள் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. அவற்றை ஒரு பதாகை போல தொங்கவிடப்படும்போது அல்லது போர்த்தப்பட்டிருக்கும் போது, நீல நிறப் பட்டை இடதுபுறத்தில் இருக்க வேண்டும் என்று மட்டும் வரையறுக்கப்பட்டிருக்கின்றது. அதே போல் கொடிமுனை அல்லது கம்பத்தில் பறக்க விடும் போது, நீலப் பட்டை கம்பத்தை எதிர்கொண்டவாறு இருக்க வேண்டும்.
1992 ஆம் ஆண்டு வரை உக்ரேனிய நாட்டு அஞ்சல் முத்திரை வெளியீடுகளில் இந்தக் கொடி தோன்றவில்லை. அப்போது வெளியிடப்பட்ட அஞ்சல் தலைகளில் கொடி மற்ற உக்ரனிய முத்திரைகளுடன் சித்தரிக்கப்பட்டன. அதற்கு பிறகு, தேசிய கொடி பெரும்பாலும் அனைத்து வெளியீடுகளிலும் உள்ளது. உக்ரேனிய தேசியவாதிகள் அமைப்பின் அஞ்சல் தலைகள் சோவியத் காலம் தொட்டு தேசபக்தி நோக்கங்களுக்காக இம்மாதிரி கொடிகளுடன் நாட்டுக்கு வெளியே அச்சிடப்பட்டன.
உக்ரானிய நாட்டு கொடியின் சுற்றளவைச் சுற்றி சரியான முறையில் ஒரு தங்க விளிம்பால் கொடியை அலங்கரிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த பாரம்பரியம் சோவியத் குடியரசின் காலத்தில் இருந்த உக்ரேனிய மாகாண கொடியின் மூலம் தொடங்கியது. மேலும் கிரேட் சோவியத் என்சைக்ளோபீடியா ஒரு தங்க நட்சத்திரத்தால் அலங்கரிக்கப்பட்ட சோவியத் காலத்து உக்ரைன் கொடியைக் காட்டுகிறது. பெரும்பாலும் அணிவகுப்பு மற்றும் உட்புற இடுகைகளில் பயன்படுத்தப்படும் கொடிகள் கவர்ச்சியை அதிகரிக்க ஒரு தங்க விளிம்பைப் பயன்படுத்துகின்றன. இந்த விளிம்பின் பயன்பாட்டை எந்த ஒரு குறிப்பிட்ட சட்டமும் கட்டுப்படுத்ததுவதில்லை . பாரம்பரியமாக, இராணுவம், காவலர், கடற்படை, விமானப்படை ஆகிய அணிவகுப்புளுக்கு ஒரு தங்க விளிம்புள்ள கொடியைப் பயன்படுத்துகின்றனர். அதே நேரத்தில் குடியரசுத் தலைவர் அலுவலகம் மற்றும் அரசு அதிகாரிகள் பல சந்தர்ப்பங்களிலும் விளிம்புள்ள கொடிகளைப் பயன்படுத்துகின்றனர்.
உக்ரேனியக் கொடிகள் வழக்கமாக சில இடங்களில் தொடர்ந்து நிரந்தரமாக பறக்க விடப்பட்டு உள்ளன. அந்த இடங்கள் பின்வருமாறு:
மேலும் சில குறிப்பிட்ட நாட்களில் தேசிய கொடிகள் பல்வேறு இடங்களில் ஏற்றப்படுகின்றன.
மரியாதை அல்லது துக்கத்தின் அடையாளமாக தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படுகிறது. நாடு முழுவதும் இவ்வகையான நடைமுறை கடைபிடிக்கப்படும்போது குடியரசுத் தலைவரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. அரைக் கம்பத்தில் பறக்க விடுவது என்பது ஒரு கொடியை கம்பத்தில் மூன்றில் இரண்டு பங்குதூரத்திற்கு மேலே ஒரு பங்கு தூரத்திற்கு கீழே பறக்கவிடுவதாகும். அரைக் கம்பத்தில் பறக்க விட இயலாத கொடிகள் மற்றும் பதாகைகளில், அதன் ஓரங்களில் துக்கத்தைக் குறிக்கும் விதமாக கருப்பு நிற நாடா இணைக்கப்படும்.
ஆண்டு தோறும் நவம்பர் மாதம் நான்காவது சனிக்கிழமை (ஹோலோடோமர் நினைவு நாள்) , பிற வரலாற்று நிகழ்வுகள், விபத்துகள், போர், அரசு இறுதிச் சடங்குகள், செப்டம்பர் 11 தாக்குதல்கள் போன்ற நிகழ்வுகளுக்கு கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படுகின்றன.
உக்ரைன் நாட்டில் தேசியக் கொடி நாள் ஆகஸ்ட் 23 அன்று கொண்டாடப்படுகிறது, இந்த வழக்கமானது 2004 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது. இதற்கு முன்னதாக, சூலை 24 அன்று பொதுவாக கீவ் நகரில் தேசியக் கொடி நாள் கொண்டாடப்பட்டது. தற்போதைய மஞ்சள் மற்றும் நீல உக்ரேனியக் கொடியின் முதல் ஏற்றம், கீவ் நகர சபையின் கொடி கம்பத்தில், கொடி அதிகாரப்பூர்வமாக தேசிய கொடியாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சூலை 24,1990 அன்று நடந்தது. 1992 முதல் உக்ரைன் நாட்டின் விடுதலை நாள் ஆகத்து 24 அன்று கொண்டாடப்படுகிறது. அரசாங்க ஆணையைத் தொடர்ந்து, இந்த தேதியில் பொதுக் கட்டிடங்களிலிருந்து கண்டிப்பாக தேசிய கொடி பறக்கவிடப்பட வேண்டும். மேலும் நாடாளுமன்றத் தேர்தல் நாட்கள் உள்ளிட்ட சில குறிப்பிட்ட கொடி நாட்களில் தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட வேண்டும். குடியரசுத் தலைவர் அல்லது ஒரு முக்கிய அரசியல்வாதியின் மரணம் போன்ற பிற நிகழ்வுகளைக் குறிக்கும் வகையில் கொடிகளை காட்சிப்படுத்துவது (கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப்படுகின்றன) அமைச்சரவையின் விருப்பப்படி அறிவிக்கப்படலாம். இவ்வாறு கொடிகள் அரை கம்பத்தில் பறக்கும்போது செங்குத்து வடிவிலான கொடிகளும் பதாகைகளும் தாழ்த்தப்படுவதில்லை. அதற்குப் பதிலாக ஒரு கம்பத்தில் தொங்கவிட்டால் அந்தக் கொடிக் கம்பத்தின் மேல் அல்லது ஒரு பதாகையைப் போல பறக்கவிடப்பட்டால் கொடியின் துணைக் குறுக்கு-கற்றைகளின் ஒவ்வொரு முனையிலும் ஒரு கருப்பு நிற நாடா (துக்கத்தைக் குறிக்க) இணைக்கப்படுகிறது.
உக்ரானிய தேசிய சின்னங்களின் பயன்பாடு கிறித்துவத்திற்கு முந்தைய காலங்களிலிருந்து இருந்து வந்துள்ளன.[7] பாரம்பரிய விழாக்களில் மஞ்சள் மற்றும் நீலம், நெருப்பு மற்றும் தண்ணீரைப் பிரதிபலிக்கிறது. மஞ்சள் மற்றும் நீல நிறக் கொடிகளின் பயன்பாடு பற்றிய திடமான ஆதாரம் 1410 ஆம் ஆண்டில் க்ரன்வால்ட் போரில் இருந்து வருகிறது.
நீலம்-மஞ்சள், சிவப்பு-கருப்பு, சிவப்பு-ஆலிவ் மற்றும் குறிப்பாக சிவப்பு வண்ண பதாகைகள் 16 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் உக்ரேனிய கோசாக்குகளால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. பொதுவாக கோசாக்குகள் தங்கள் பிரபுக்களின் பதாகைகளை பறக்கவிட்டார்கள். மேலும், கலீசியா நாட்டின் பதாகைகளில் மஞ்சள் மற்றும் நீல நிறங்கள் பொதுவானவையாக இருந்தன.
சிலர் உக்ரைனின் தற்போதைய தேசிய கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டதன் தொடக்க நாளாக 1848 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதியைக் குறிப்பிடுகின்றனர். இந்த நாளில் லீம்பெர்க்கில் (லிவிவ்) உச்ச ரூத்தேனிய கவுன்சில் ஒரு நீல மற்றும் மஞ்சள் பதாகையை அதிகாரபூர்வ கொடியாக ஏற்றுக்கொண்டது.[8] இந்த நடவடிக்கை குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்றாலும், ஆஸ்திரிய இராணுவத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட உக்ரேனிய பிரிவுகள் தங்கள் முத்திரையில் இந்த நீல மற்றும் மஞ்சள் பதாகைகளைப் பயன்படுத்தின. 1905 ஆம் ஆண்டின் ரஷ்யப் புரட்சியின் போது, இந்தக் கொடி டினீப்பர் நகரில் உக்ரேனியர்களால் பயன்படுத்தப்பட்டது.
1917 இல் உக்ரைனின் சுதந்திரப் போராட்டத்தின் போது நீல-மஞ்சள் மற்றும் மஞ்சள்-நீலக் கொடிகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன.[8] வரலாற்றில் முதல் முறையாக, 1917 ஆம் ஆண்டு மார்ச் 25 அன்று பெட்ரோகிராட் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது நீல-மஞ்சள் கொடி பறக்கவிடப்பட்டது.[8] உக்ரைனிய பிரதேசத்தில் இந்தக்கொடி முதல் முறையாக கீவ் நகரில் 29 மார்ச் 1917 அன்று ஆயுதம் ஏந்திய படையினரால் பறக்கவிடப்பட்டது.[8] 1 ஏப்ரல் 1917 அன்று கீவ் நகரில் உருசிய அரசாட்சிக்கு எதிராக ஒரு வலுவான ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் 320 க்கும் மேற்பட்ட தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டன. உக்ரேனியக் கொடிகளுடன் இதேபோன்ற பல ஆர்ப்பாட்டங்கள் ரஷ்யப் பேரரசு முழுவதும் மற்றும் உக்ரேனிய இன நிலங்களுக்கு அப்பாலும் நடந்தன.[8] மைக்கைலோ ஹ்ருஷேவ்ஸ்கி மற்றும் செர்ஹி யெஃப்ரெமோவ் உள்ளிட்ட புகழ்பெற்ற உக்ரேனிய அரசியல்வாதிகள் ஏப்ரல் 1 ஆர்ப்பாட்டத்தைப் பற்றி எழுதி உள்ளனர், அதில் அங்கு நீல மற்றும் மஞ்சள் கொடிகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். அதே நேரத்தில் டிமிட்ரோ டோரோஷென்கோ அவை மஞ்சள் மற்றும் நீல நிறத்தில் இருந்ததாகக் கூறினார். 1917 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற்ற முதல் உக்ரேனிய இராணுவ மாநாட்டில் நீல-மஞ்சள் கொடி பறக்கவிடப்பட்டது.[8] 1918 ஆம் ஆண்டு உக்ரேனிய மக்கள் குடியரசால் நிறுவப்பட்ட அதிகாரப்பூர்வ கொடி நீல-மஞ்சள் நிறத்தில் இருந்தது.[9] கடற்படைக் கொடி வெளிர் நீல-மஞ்சள் நிறத்தில் இருந்தது, இது அதிகாரப்பூர்வ கொடி வெளிர் நீலம்-மஞ்சள் நிறமாக இருப்பதற்கான சான்றாக எடுத்துக்கொள்ளலாம்.[10][11] சோவியத் ஆட்சியின் போது, உக்ரேனிய கொடி முற்றிலும் தடை செய்யப்பட்டது, மேலும் அதை காட்சிப்படுத்தும் எவர் மீதும் "சோவியத் எதிர்ப்பு பிரச்சாரத்திற்காக" குற்றவியல் வழக்குத் தொடரப்படலாம் என்று அறிவிக்கப்பட்டது. உக்ரேனிய சோவியத் குடியரசின் முதல் கொடி 1919 ஆம் ஆண்டு மார்ச் 10 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது, இது சோவியத் உக்ரைன் அரசின் அடையாளமாக இருந்தது. 1991 இல் சோவியத் ஒன்றியம் உடைவதற்கு முன்பு வரை அதிகாரப்பூர்வக் கொடிகள் அவ்வப்போது மாற்றப்பட்டன, ஆனால் இவை அனைத்தும் உருசியாவின் அக்டோபர் புரட்சி சிவப்பு நிற கொடியை அடிப்படையாகக் கொண்டிருந்தன. 1930களில் சிவப்பு நிற கொடியில் ஒரு தங்க எல்லை சேர்க்கப்பட்டது. 1937 ஆம் ஆண்டில், ஒரு சிறிய தங்க சுத்தி மற்றும் அரிவாள் சேர்க்கப்பட்ட ஒரு புதிய கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1949 ஆம் ஆண்டில் சோவியத் உக்ரைனின் கொடி மீண்டும் மாற்றப்பட்டது.[12] பைலோருசியா ஆகிய நாடுகளை உறுப்பு நாடுகளாகச் சேர்ப்பதன் மூலம் சோவியத் ஒன்றியம் ஐக்கிய நாடுகள் சபையில் இரண்டு கூடுதல் இடங்களைப் பெற முடிந்தது.[12] சோவியத் கொடியும் மாகாணங்களின் கொடிகளும் ஒரே மாதிரியாக இருந்ததால் மாகாண கொடிகள் மாற்றப்பட்டன. புதிய உக்ரேனியக் கொடி சிவப்பு மற்றும் நீல நிற கோடுகள், மேல் இடது மூலையில் தங்க நட்சத்திரம், சுத்தி மற்றும் அரிவாள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. [12] நிக்கித்தா குருசேவ் மற்றும் லாசர் ககனோவிச் போன்ற பொதுவுடைமை கட்சித் தலைவர்கள் அதிகாரப்பூர்வ கொடி வண்ணங்களில் 'வெளிர் நீலம்' மற்றும் 'நீலம்' போன்ற நிறங்களைப் பயன்படுத்த அஞ்சினர், ஏனெனில் அவை உக்ரேனிய புலம்பெயர்ந்தோரால் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன.
சோவியத் காலத்தில், தேசிய நீல மற்றும் மஞ்சள் கொடியை ஏற்ற பல அனுமதிக்கப்படாத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.[13] 1958 ஆண்டில், கோடோரிவ் ராயோனின் வெர்பிட்சியா கிராமத்தில் ஒரு குழு நிறுவப்பட்டது, அதன் உறுப்பினர்கள் தேசிய கொடிகளை உயர்த்தி, இருளின் மறைவின் கீழ் சோவியத் எதிர்ப்பு துண்டு பிரசுரங்களை பரப்பினர்.
மிக்கைல் கோர்பச்சேவின் பெரெஸ்ட்ரோயிகா மற்றும் கிளாஸ்னோஸ்ட் கொள்கைகளின் செல்வாக்கின் கீழ், தனிப்பட்ட சோவியத் குடியரசுகள் தேசிய அடையாளத்தின் வலுவான உணர்வைப் பெற்றன. இது 1991 இல் சோவியத் ஒன்றியத்தின் சரிவுக்கு வழிவகுத்தது. சோவியத் யூனியனில் இணைக்கப்பட்ட கடைசி பிரதேசங்களாக இருந்த மூன்று பால்டிக் மாநிலங்களுக்கும் மேற்கு உக்ரைனுக்கும் இது குறிப்பாக உண்மையாக இருந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய சின்னங்களை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளும் தேசிய விழிப்புணர்வுடன் இணைந்து நடைபெற்றன. 1988 ஆம் ஆண்டில், லித்துவேனிய சோவியத் குடியரசின் உச்சநிலை குழு சோவியத் லித்துவேனியாவின் தேசிய கொடியை மீண்டும் நிறுவியது. லாட்வியா மற்றும் எஸ்டோனியாவின் நாடாளுமன்றங்களும் விரைவில் இதைப் பின்பற்றின. சோவியத் காலத்தில், தேசிய நீல மற்றும் மஞ்சள் கொடியை ஏற்ற பல அனுமதிக்கப்படாத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.[14] 1958 ஆண்டில், கோடோரிவ் ராயோனின் வெர்பிட்சியா கிராமத்தில் ஒரு குழு நிறுவப்பட்டது, அதன் உறுப்பினர்கள் இந்த கொடிகளை உயர்த்தி, இருளின் மறைவின் கீழ் சோவியத் எதிர்ப்பு துண்டு பிரசுரங்களை பரப்பினர்.
மிக்கைல் கோர்பச்சேவின் பெரஸ்ட்ரோயிகா மற்றும் கிளாஸ்னோஸ்ட் கொள்கைகளின் கீழ், தனிப்பட்ட சோவியத் குடியரசுகள் தேசிய அடையாளத்தின் வலுவான உணர்வைப் பெற்றன. இது 1991 இல் சோவியத் ஒன்றியத்தின் சரிவுக்கு வழிவகுத்தது. சோவியத் யூனியனில் இணைக்கப்பட்ட கடைசி பிரதேசங்களாக இருந்த மூன்று பால்டிக் மாநிலங்களுக்கும் மேற்கு உக்ரைனுக்கும் இது குறிப்பாக உண்மையாக இருந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய சின்னங்களை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளும் தேசிய விழிப்புணர்வுடன் இணைந்து நடைபெற்றன. 1988 ஆம் ஆண்டில், லித்துவேனிய சோவியத் குடியரசின் உச்சநிலை குழு சோவியத் லித்துவேனியாவின் பழைய தேசிய கொடியை மீண்டும் நிறுவியது. லாட்வியா மற்றும் எஸ்டோனியாவின் நாடாளுமன்றங்களும் விரைவில் இதைப் பின்பற்றின.
சுதந்திரத்தைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1991 இல் நீல மற்றும் மஞ்சள் கொடி தற்காலிகமாக அதிகாரப்பூர்வ விழாக்களுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டது.[17][18] 1992 ஜனவரி 28 அன்று உக்ரைனின் நாடாளுமன்றத்தால் இந்தக்கொடி அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.[19][20]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.