ஈப்போ தீமோர் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Ipoh Timor; ஆங்கிலம்: Ipoh Timor Federal Constituency; சீனம்: 怡保东区国会议席) என்பது மலேசியா, பேராக், கிந்தா மாவட்டத்தில் (Kinta District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P064) ஆகும்.[7]

விரைவான உண்மைகள் மாவட்டம், வாக்காளர்களின் எண்ணிக்கை ...
ஈப்போ தீமோர் (P064)
மலேசிய மக்களவைத் தொகுதி
பேராக்
Ipoh Timor (P064)
Federal Constituency in Perak
Thumb
பேராக் மாநிலத்தில்
ஈப்போ தீமோர் மக்களவைத் தொகுதி

(P64 Ipoh Timor)
மாவட்டம்கிந்தா மாவட்டம்
பேராக்
வாக்காளர்களின் எண்ணிக்கை118,178 (2022)[1]
வாக்காளர் தொகுதிஈப்போ தீமோர் தொகுதி[2]
முக்கிய நகரங்கள்ஈப்போ, பெர்ச்சாம், மெங்லெம்பு, குனோங் ரப்பாட், ஜெலாப்பாங், புந்தோங், கிளேபாங்
பரப்பளவு43 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1994
கட்சி பாக்காத்தான் அரப்பான்
மக்களவை உறுப்பினர்லீ சுவான் ஆவ்
(Lee Chuan How)
மக்கள் தொகை134,700 (2020) [4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1995
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5]
மூடு




Thumb

2022-இல் ஈப்போ தீமோர் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:[6]

  சீனர் (68.4%)
  மலாயர் (23.7%)
  இதர இனத்தவர் (0.4%)

ஈப்போ தீமோர் மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1995-ஆம் ஆண்டில் இருந்து ஈப்போ தீமோர் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

ஈப்போ தீமோர்

ஈப்போ மாநகரம் இரு மக்களவைத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஈப்போவின் கிழக்குப் பகுதி ஈப்போ தீமோர் (Ipoh Timor) என்றும்; மேற்குப் பகுதி ஈப்போ பாராட் (Ipoh Barat) என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த நகரம் கிந்தா ஆற்றின் கரைகளில் அமைந்துள்ளது. பேராக் மாநிலத்தின் தலைநகரமான ஈப்போ, மலேசியாவில் மிகவும் சுத்தமான நகரம் என்று அறியப்படுகிறது.

2021-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி, ஈப்போவின் மக்கள் தொகை 1,022,240. அந்த வகையில், அதிக மக்கள் தொகை கொண்ட மலேசிய மாநகரங்களில் நான்காவது இடத்தைப் பெறுகிறது. 19-ஆம், 20-ஆம் நூற்றாண்டுகளில் ஈப்போ பெரும் வணிகத் தளமாகப் புகழ் பெற்று விளங்கியது

பிராங்க் சுவெட்டன்காம்

ஈப்போ நகரம், மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூர் மாநகரில் இருந்து 200 கி.மீ. வடக்கே உள்ளது. வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை வழியாகவும் ஈப்போ நகரத்தை அடையலாம். ஈப்போ மாநகரம் கிந்தா பள்ளத்தாக்கின் நடு மையத்தில் அமைந்து உள்ளது.

ஈப்போவைப் புகழ் பெறச் செய்தவர்களில் மிகவும் முக்கியமானவர் சர் பிராங்க் சுவெட்டன்காம் (Sir Frank Swettenham). 1920-ஆம் ஆண்டுகளில் ஈப்போ ஒரு மாபெரும் ஈயப் பட்டணமாக உருவெடுத்தது. ஈப்போ நகரை கிந்தா ஆறு இரண்டாகப் பிரிக்கின்றது. மேற்குப் பகுதியில் பழைய நகரமும் கிழக்குப் பகுதியில் புதிய நகரமும் இருக்கின்றது.

1941-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி ஜப்பானியர்கள் ஈப்போவின் மீது படை எடுத்தனர். அவர்களின் ஆட்சி காலத்தில் பேராக் மாநிலத்தின் தலைமைப் பட்டணமாக ஈப்போ அறிவிக்கப்பட்டது.[8] அதற்கு முன்னர் தைப்பிங் நகரம் தான் பேராக் மாநிலத்தின் தலைப் பட்டணமாக இருந்தது.

ஈப்போ தீமோர் மக்களவைத் தொகுதி

மேலதிகத் தகவல்கள் ஈப்போ தீமோர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1995 - 2022), மக்களவை ...
ஈப்போ தீமோர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1995 - 2022)
மக்களவைதொகுதிஆண்டுகள்உறுப்பினர்கட்சி
1994-ஆம் ஆண்டில் பாசிர் பிஞ்சி மக்களவைத் தொகுதியில் இருந்து
ஈப்போ தீமோர் தொகுதி உருவாக்கப்பட்டது
9-ஆவது மக்களவை P0611995–1999சாங் கோன் இயூ
(Chang Kon You)
பாரிசான் நேசனல்
(மலேசிய சீனர் சங்கம்)
10-ஆவது மக்களவை1999–2004தாங் பா சோங்
(Thong Fah Chong)
11-ஆவது மக்களவை P0642004–2008லிம் கிட் சியாங்
(Lim Kit Siang)
ஜனநாயக செயல் கட்சி
12-ஆவது மக்களவை2008–2013பாக்காத்தான் ராக்யாட்
(ஜனநாயக செயல் கட்சி)
13-ஆவது மக்களவை2013–2018சு கியோங் சியோங்
(u Keong Siong)
14-ஆவது மக்களவை2018–2022வாங் கா வோ
(Wong Kah Woh)
பாக்காத்தான் அரப்பான்
(ஜனநாயக செயல் கட்சி)
15-ஆவது மக்களவை2022–தற்போது வரையில்லீ சுவான் ஆவ்
(Lee Chuan How )
மூடு

ஈப்போ தீமோர் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022

மேலதிகத் தகவல்கள் பொது, வாக்குகள் ...
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொதுவாக்குகள் %∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
118,178
வாக்களித்தவர்கள்
(Turnout)
80,83967.51% - 10.89%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
79,789100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
381
செல்லாத வாக்குகள்
(Total Rejected Ballots)
678
பெரும்பான்மை
(Majority)
43,88855.02% - 5.91
வெற்றி பெற்ற கட்சிபாக்காத்தான்
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்
[9]
மூடு

ஈப்போ தீமோர் மக்களவை வேட்பாளர் விவரங்கள்

மேலதிகத் தகவல்கள் வேட்பாளர், கட்சி ...
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர் கட்சி செல்லுபடி
வாக்குகள்
பெற்ற
வாக்குகள்
 % ∆%
லீ சுவான் ஆவ்
(Lee Chuan How)
பாக்காத்தான் 79,789 57,549 72.14% - 8.32%
நோர் அப்சாயின்சாம் சாலே
(Nor Afzainzam Salleh)
பெரிக்காத்தான் - 13,661 17.12% + 17.12%
நிங் காய் சியோங்
(Ng Kai Cheong)
பாரிசான் - 8,570 10.74% - 8.80 %
மூடு

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.