இளைய சைரஸ்
அகாமனிசியப் பேரரசின் இளவரசர் / From Wikipedia, the free encyclopedia
இளைய சைரஸ் (Cyrus the Younger, கிரேக்கம்: Κῦρος Kyros ; கிமு 401 இல் இறந்தார்) என்பவர் அகாமனிசிய இளவரசர் மற்றும் தளபதி ஆவார். இவர் கிமு 408 முதல் 401 வரை லிடியா மற்றும் ஐயோனியாவின் ஆளுநராக இருந்து ஆட்சி செய்தார். இவர் இரண்டாம் டேரியஸ் மற்றும் பாரிசாடிஸ் ஆகியோரின் மகனாவார். இவர் கிமு 401 இல் பாரசீக அரியாசத்திலிருந்து தன் அண்ணனான இரண்டாம் அர்த்தசெராக்சை அகற்றி அதில் தான் அமர குனக்சா சமரில் ஈடுபட்டு இறந்தார்.
இளைய சைரஸ் 𐎤𐎢𐎽𐎢𐏁 | |
---|---|
இளைய சைரசின் காலத்தில், ஆசியா மைனரின் மாகாணத்தில் அநாமதேய உருவப்படம். 478-387 கிமு 478-387 இல் அயோனியா, போகாயா நாணயத்திலிருந்து. | |
Satrap of Lydia | |
ஆட்சிக்காலம் | கிமு 408–401 |
முன்னையவர் | Tissaphernes |
பின்னையவர் | Tissaphernes |
பிறப்பு | கிமு 423 இக்கு பிறகு |
இறப்பு | கிமு 3 செப்டம்பர், 401 |
அரசமரபு | Achaemenid |
தந்தை | இரண்டாம் டேரியஸ் |
தாய் | Parysatis |
மதம் | சரதுசம் |
சைரசின் வரலாறு மற்றும் அவரது கிரேக்க கூலிப்படையினர் பின்வாங்கிய வரலாறு ஆகியவை குறித்து செனபோன் தனது அனபாசிஸ் என்ற நூலில் கூறியுள்ளார். மற்றொரு தரவு, அனேகமாக ஸ்டிம்பாலசின் சோபெனெட்டஸிலிருந்து, கிரேக்க வரலாற்றாளர் எபோரசால் குறிப்பிடப்பட்டுள்ளது.[1] மேலும் இவர் குறித்த தகவல்களானது இரண்டாம் ஆர்டாக்செர்க்சசின் மருத்துவர் செட்சியாஸ் போடியஸ் மூலம் எடுக்கபட்ட குறிப்புகளில் கூடுதல் தகவல்கள் உள்ளன; புளூட்டாக்கின் லைவ்ஸ் ஆஃப் அர்டாக்செர்க்ஸ் II மற்றும் லைசாந்தர்; மற்றும் துசிடிடீசின் இஸ்ட்ரி ஆப் பெலோபொன்னேசியன் வார்[2] போன்றவை இளைய சைரஸ் பற்றிய தகவல்களின் துவக்க ஆதாரங்களாக உள்ளன.