இலொய்லோ
From Wikipedia, the free encyclopedia
இலொய்லோ (Iloilo) என்பது பிலிப்பீன்சின் விசயாசின், மேற்கு விசயாசுப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் இலொய்லோ நகரம் ஆகும். இம்மாகாணம் 1566 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் ஆர்தர் டிபென்சர் எச்ர். (Arthur Defensor, Sr.) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 5,000.83 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக இலொய்லோ மாகாணத்தின் சனத்தொகை 1,936,423 ஆகும்.[2] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 19ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 11ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. இம்மாகாணத்தில் 1,721 கிராமங்களும், 42 மாநகராட்சிகளும் உள்ளன. அத்துடன் இம்மாகாணத்தில் பிலிப்பினோ ஆங்கிலம் உள்ளடங்கலாக ஐந்து பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகாணத்தில் வாழும் மக்கள் பொதுவாக ஹிலிகய்னொன் மக்கள் என அறியப்படுகின்றனர். அத்துடன் இம்மாகாணத் தேவாலயங்களில் எசுப்பானியக் கட்டிடக்கலையைக் காணக்கூடியதாக உள்ளது.
இலொய்லோ | |
---|---|
மாகாணம் | |
நாடு | பிலிப்பீன்சு |
பிராந்தியம் | மேற்கு விசயாசு |
நேர வலயம் | ஒசநே+8 (பிசீநே) |