From Wikipedia, the free encyclopedia
இறைவி பெண்பால் கடவுள்களைக்குறிக்கும். இறைவியர் ஓரிறை அல்லது ஈரிறை சமயங்களிலும் கூட காணப்படுகின்றனர்.[1][2] பல கலாச்சாரங்களில் பூமி, தாய்மை, காதல், வீடு, போர், இறப்பு, குணப்படுத்துதல் முதலியவை இறைவிகளுக்கே உறியவைகளாகக் கருதப்படுகின்றன. பண்டைய கிரேக்க மதம், இந்து மதம் போன்றவற்றில் பெண் கடவுளை வணங்கும் முறை உள்ளது. ஆனால் சமணம், பௌத்தம் போன்ற சில மதங்கள் கடவுள்களை வணங்குவதில்லை மாறாக போதனைகளை பின்பற்றுகின்றன. சில சமயங்களின் பெண்கடவுள்களே முதன்மைக்கடவுளர்களாகவும் உள்ளனர். இந்துமதத்தில் சாக்தம் என்னும் பிரிவினர் சக்தி மட்டுமே தெய்வம், மற்ற தெய்வங்கள் கிடையாது என கருதுகின்றனர். இது திருமால் மற்றும் சிவனேடு சேர்ந்து மூன்று பெரும் இந்துமதத்தின் பிரிவுகளில் ஒன்றாகும். திபெத்திய புத்த மதத்தில் ஆர்ய தாரா என்னும் பெயரில் ஒரு பெண் போதிசத்துவரை வணங்குகின்றனர்.
இந்து மதத்தில் கடவுள்கள் இல்லற வாழ்க்கை வாழ்பவர்களா இருக்கிறார்கள். தம்பதி சமேதமாக இருப்பதால், இந்து மதத்தில் பெண் கடவுள்களுக்கு மனைவி, தாய், மகள் என உறவுகளும் இருக்கின்றன. சிவபெருமானின் மனைவியாக சக்தியையும், பெருமாளின் மனைவியாக திருமகளையும், பிரம்மாவின் மனைவியாக சரஸ்வதியையும் இந்து புராணங்கள் சுட்டுகின்றன. சக்தியின் வடிவமாக பார்வதியும், செல்வத்திற்கு அதிபதியாக மகாலட்சுமியும், கல்விக்கு தெய்வமாக சரஸ்வதியையும் இந்துக்கள் வணங்குகின்றார்கள்.
துர்க்கை வழிபாடு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
அத்துடன் நதி, நிலம் போன்றவைகளையும் இறைவியாக பெயரிட்டு வணங்கும் வழக்கமும் இருந்து வருகிறது. உதாரணமாக கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி போன்ற நதிகளை குறிப்பிடலாம்.
நாட்டார் தெய்வங்கள் என்று போற்றப்படும் சிறுதெய்வ வழிபாட்டில் பெண் தெய்வ வழிபாடு அதிகம் காணப்படுகிறது. தமிழ் இலக்கியங்களிலும் பெண் தெய்வ வழிபாடுகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இத்தகைய பெண் தெய்வ வழிபாட்டினை தாய்த் தெய்வங்கள், கன்னி தெய்வங்கள் என இரு பிரிவுகளாக பிரிக்கின்றார்கள்.
பெண்களை தாய்மையின் வடிவமாகவும், வளமையின் குறியீடாகவும் பாரத மக்கள் பார்த்தமையினால் பெண் தெய்வ வழிபாடு தாய்த் தெய்வ வழிபாடாக மாறியது.
மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன், சீலைக்காரியம்மன், திரௌபதையம்மன், நாச்சியம்மன், பேச்சியம்மன், கண்டியம்மன், வீருசின்னம்மாள், உச்சிமாகாளி, மந்தையம்மன், சோலையம்மன், ராக்காச்சி, எல்லையம்மன், அங்காளம்மன், பேச்சி, இசக்கி, பேராச்சி, ஜக்கம்மா போன்ற தெய்வங்கள் தாய்த் தெய்வங்களாக வழிபாடு செய்யப்படுகின்றன.
பெண் என்பவள் சக்தியின் வடிவமாக கருதப்படுவதால் இந்த தெய்வங்கள் அனைத்தும் அம்மனாக உருவகம் செய்து வழிபாடு செய்யப்படுகின்றனர்.
பூப்படைந்து திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் விபத்தினாலோ, கொலை செய்யப்பட்டோ, தற்கொலை செய்து கொண்டோ இறக்கும் பொழுது, அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அவளை கன்னி தெய்வமாக வணங்குகின்றார்கள். தமிழ் சமூகங்களில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இந்த கன்னிதெய்வ வழிபாட்டு முறை காணப்படுகிறது. சில குடும்பங்கள் கன்னி தெய்வ வழிபாட்டினை குலதெய்வ வழிபாடாக முன்னேற்றம் செய்கின்றார்கள். அவர்களுடைய சந்ததியினர் அந்த கன்னி தெய்வத்தினை குலதெய்வமாக வணங்கி வருகிறார்கள்.[3]
தங்கள் வீடுகளில் சிறுவயதில் இறந்த பெண்களையோ, கன்னிகளையோ வணங்கும் முறை தமிழ்நாட்டில் இருக்கிறது. இதனை வீட்டு தெய்வம் (இல்லுறைத் தெய்வம்) என்கின்றனர்.
கிரேக்க மதமும் இந்து மதத்தினைப் போல தெய்வங்களிடையே உறவுமுறைகளை கொண்டு காணப்படுகிறது. எனவே கிரேக்க மதத்தில் மனைவி, மகள் என்ற நிலைகளில் பெண் கடவுள்கள் உள்ளார்கள். ஆர்ட்டெமிசு, எரா, அப்ரோடிட், ஏதெனா, டிமிடர், எசுடியா போன்றோர் குறிப்பிடத்தக்க பெண் தெய்வங்களாவர்.
யூத மரபு புணைவுக் கதைகளின்படி ஆதாமின் முதல் மனைவி லிலித் ஆவார். ஆனால் இவர் ஆதாமோடு வாழ விரும்பவில்லை. அதிதூன் சமாயேலோடு உறவுகொண்டு ஏதேன் தோட்டத்துக்கு வர மறுத்துவிட்டர் என நம்பப்படுகின்றது..[4] இக்கதையின் பல அம்சங்கள் நடுக் கால ஐரோப்பாவில் புணையப்பட்டது ஆகும்.[5] கில்கமெஷ் காப்பியத்தில் இவரைப்பற்றிய வேறு பல கதைகள் உண்டு.
கிறித்துவத்தில், குறிப்பாக கத்தோலிக்க திருச்சபையில் மரியாவுக்கு உயரிய வணக்கம் செலுத்தப்படுகின்றது. ஆயினும் அவரை தெய்வமாக வழிபடுவதில்லை. கிறித்தவத்தில் வணக்கத்திற்கும், வழிபாட்டிற்கும் வேறுபாடு உண்டு. ஓரிறைக் கொள்கையினை உடைய கிறித்தவத்தில் கடவுள் ஒருவருக்கே வழிபாடு செலுத்தப்படுகின்றது. கத்தோலிக்க திருச்சபையில் பிங்கெனின் ஹில்டெகார்ட் முதலிய பல பெண் இறையியளாலர்களும் சித்தர்களும் இருந்துள்ளனர்.
ஞானக் கொள்கை என்னும் கிறித்தவ திரிபுக்கொள்கையில் பெண் ஆவியான சோபியா ஞானத்தின் உறுவாகப்பார்கப்படுகின்றார்.
புது யுக இயக்கத்தில் 1970கள் முதல் இறை பெண்மை என்னும் பதம் பயன்படுத்தப்படுகின்றது. இது 2003இல் டான் பிரவுன்னின் த டா வின்சி கோட் புத்தகம் மூலம் பலரும் அறியவந்தனர்.
உவமைகள் பலவற்றிலும் இறைவிகள் இருந்துள்ளனர். இவர்கள் கவிநயத்துக்காக பெரிதும் பயன்பட்டனர். சேக்சுபியர் தனது ஆண் கதை மாந்தர்கள் பலர் பெண் கதை மாந்தர்களை கடவுள் என அழைப்பதாக வடிவமைத்துள்ளார். பெண்களின் அழகை வருனிக்க அவர்கள் கடவுள் போல இருப்பதாக சொல்லும் வழக்கும் பல காலமாக இருந்துள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.