இருசமக்கூறிடல்
ஒரு வடிவத்தை இரு சம பாகங்களாகப் பிரிக்கும் வடிவியல் செயல் / From Wikipedia, the free encyclopedia
வடிவவியலில் இருசமக்கூறிடல்(bisection) என்பது எந்தவொரு வடிவவியல் வடிவங்களையும் இரண்டு சமமான அல்லது சமான பாகங்களாக ஒரு நேர்கோட்டால் பிரிப்பது ஆகும். இக்கோடு இருசமவெட்டி(bisector) என அழைக்கப்படுகிறது. ஒரு கோட்டுத்துண்டின் மையப்புள்ளிவழிச் செல்லும் கோட்டுத்துண்டின் இருசமவெட்டியும், ஒரு கோணத்தின் உச்சி வழியே சென்று அக்கோணத்தை இருசம கோணங்களாகப் பிரிக்கும் கோண இருசமவெட்டியும் அதிக அளவில் பயன்படும் இருசமவெட்டிகள் ஆகும்.
முப்பரிமாண வெளியில், இருசமவெட்டியானது தளமாக அமையும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/4/45/Perpendicular_bisector.gif)