![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d5/Hexagonal_bifrustum.png/640px-Hexagonal_bifrustum.png&w=640&q=50)
இருஅடிக்கண்டம்
From Wikipedia, the free encyclopedia
ஒரு n-கோண இருஅடிக்கண்டம் (bifrustum) என்பது மூன்று இணையான n-கோணத் தளங்களைக் கொண்ட பன்முகியாகும். இம்மூன்று தளங்களில், நடுத்தளம் மூன்றிலும் பெரிதானதாகவும் மேல், அடித் தளங்கள் முற்றொத்தவையாகவும் இருக்கும். இரு முற்றொத்த அடிக்கண்டங்களை சமச்சீர் தளங்களில் இணைப்பது மூலமாக இரு அடிக்கண்டத்தை வடிவமைக்கலாம். இரு துருவ முனைகளை முனைத்துண்டித்தல் மூலமாகவும் இருஅடிக்கண்டத்தை ஒரு இருபட்டைக்கூம்பாகப் பெறலாம்.
மேலதிகத் தகவல்கள் இருஅடிக்கண்டங்களின் கணம் ...
இருஅடிக்கண்டங்களின் கணம் | |
---|---|
![]() அறுகோண இருஅடிக்கோண எடுத்துக்காட்டு | |
முகங்கள் | 2 n-கோணிகள், 2n சரிவகங்கள் |
விளிம்புகள் | 5n |
உச்சிகள் | 3n |
சமச்சீர்மை குலம் | Dnh, [n,2], (*n22) |
இருமப் பன்முகி | நீள் இருபட்டைக்கூம்புகள் |
பண்புகள் | குவிவு |
மூடு
இருஅடிக்கண்டங்கள், நீள் இருபட்டைக்கூம்பு குடும்பத்தின் இருமமாக இருக்கும்.