இந்தியக் கடற்படை
From Wikipedia, the free encyclopedia
இந்தியக் கடற்படை (தேவநாகரி: भारतीय नौ सेना; Indian Navy) என்பது இந்திய பாதுகாப்பு படைகளின் கடற்படை பிரிவாகும். இந்தியக் கடற்படைத் தலைவரால் (Chief of Naval staff) கடற்படை வழிநடத்தப்படுகின்றது. இது பாரசீக வளைகுடா, ஆப்பிரிக்காவின் கொம்பு, மலாக்கா நீரிணை மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் பொதுவாக செயல்படுகிறது.
இந்தியக் கடற்படை Indian Navy | |
---|---|
இந்திய கடற்படையின் சின்னம் | |
உருவாக்கம் | 26 January 1950; 74 ஆண்டுகள் முன்னர் (26 January 1950) (இந்தியக் கடற்படை) 5 September 1612; 411 ஆண்டுகள் முன்னர் (5 September 1612) (கிழக்கிந்திய கம்பெனி கடற்படை)[1][2] |
நாடு | இந்தியா |
வகை | கடற்படை |
பொறுப்பு | கடற்படை போர், அணுஆயுத தடுப்பு |
அளவு | 64,000 செயல் வீரர்கள் [3] 50,000 இருப்பு வீரர்கள் [4] 250 கப்பல்கள் 300 வானூர்திகள் |
பகுதி | இந்திய ஆயுதப்படை |
தலைமையகம் | ஒருங்கிணைந்த பாதுகாப்பு தலைமையகம், பாதுகாப்பு அமைச்சகம், புது டெல்லி |
குறிக்கோள்(கள்) | शं नो वरुणः .
சாம் நோ வருணா ("நீரின் இறைவன் நமக்கு அருள் புரியட்டும்") |
நிறங்கள் | கடற்படை நீலம், தங்கம் மற்றும் வெள்ளை |
இந்தியக் கடற்படையின் முதன்மை நோக்கம், நாட்டின் கடல் எல்லைகளை பாதுகாப்பது மற்றும் நாட்டின் பிற ஆயுதப் படைகளுடன் இணைந்து, போர் மற்றும் அமைதி காலங்களில் இந்தியாவின் எல்லைகள், மக்கள் அல்லது கடல்சார் நலன்களுக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தல் அல்லது ஆக்கிரமிப்புகளையும் தடுத்தல் ஆகியனவாகும். ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மற்றும் கூட்டுப் பயிற்சிகள் மூலமாக சர்வதேச உறவுகளை மேம்படுத்துதல், நல்லெண்ணப் பயணங்கள் மற்றும் பேரிடர் நிவாரணம் உள்ளிட்ட மனிதாபிமானப் பணிகள் ஆகியவற்றிலும் இந்தியக் கடற்படை பங்காற்றுகின்றது.
சூன் 2019 நிலவரப்படி, இந்திய கடற்படையில் 67,252 பணியிலுள்ள மற்றும் 75,000 இருப்புப் வீரர்கள் உள்ளனர். செப்டம்பர் 2022 நிலவரப்படி, இந்தியக் கடற்படையில் இரண்டு வானூர்தி தாங்கிக் கப்பல்கள், 12 நாசகாரிக் கப்பல்கள் மற்றும் 18 நீர்மூழ்கிக் கப்பல்கள் உட்பட 250 க்கும் மேற்பட்ட கப்பல்கள் உள்ளன. இந்திய கடற்படையின் வானூர்தி பிரிவில் ஏறத்தாழ 300 வானூர்திகள் உள்ளன. தனது சக்திகளை பெருக்கிக்கொள்ளும் நோக்கத்தோடு இந்தியக் கடற்படை மிகப் பெரிய அளவில் நவீனத்துவத்திற்கும் விரிவாக்கத்திற்கும் தன்னை உட்படுத்திக்கொண்டிருக்கிறது.