ஆல்பிரட் வெர்னெர்
சுவிட்சர்லாந்து வேதியியலாளர் / From Wikipedia, the free encyclopedia
ஆல்பிரட் வெர்னெர் (Alfred Werner) (12 திசம்பர் 1866 – 15 நவம்பர் 1919) என்பவர் சுவிட்சர்லாந்து நாட்டின் வேதியியலாளர் ஆவார். இவர் சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனம், சூரிக்கின் மாணவரும், சூரிக்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் ஆவார். இவர் இடைநிலை உலோக அணைவுச் சேர்மங்களில் எண்முகி மூலக்கூறு வடிவினை முன்மொழிந்தமைக்காக 1913 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசினை வென்றார். வெர்னர் நவீன அணைவு வேதியியலுக்கான அடிப்படைக் கோட்பாடுகளை உருவாக்கினார். இவரே நோபல் பரிசினை வென்ற முதல் கனிம வேதியியலாளர் ஆவார். அவர் 1973 ஆம் ஆண்டிற்கு முன்னதாகப்பெற்ற ஒரே நபர் ஆவார். [1]
விரைவான உண்மைகள் ஆல்பிரட் வெர்னெர், பிறப்பு ...
ஆல்பிரட் வெர்னெர் | |
---|---|
பிறப்பு | 12 திசம்பர் 1866 மல்ஹவுஸ், ஆவ்ட்-ரின், அல்சாசே, பிரான்சு |
இறப்பு | 15 நவம்பர் 1919(1919-11-15) (அகவை 52) சூரிக்கு, சுவிட்சர்லாந்து |
தேசியம் | சுவிட்சர்லாந்து |
துறை | கனிம வேதியியல் |
பணியிடங்கள் | சூரிக் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | சூரிக் பல்கலைக்கழகம் சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனம், சூரிக் |
அறியப்படுவது | இடைநிலை உலோகங்களின் அணைவுச் சேர்மங்களின் அமைப்பு |
விருதுகள் | வேதியியலுக்கான நோபல் பரிசு (1913) |
மூடு