![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ef/Aruvillage.jpg/640px-Aruvillage.jpg&w=640&q=50)
ஆரு, ஜம்மு மற்றும் காஷ்மீர்
ஜம்மு காஷ்மீரில் உள்ள கிராமம் / From Wikipedia, the free encyclopedia
ஆரு (Aru) என்பது இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியிலுள்ள அனந்த்நாக் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமமும், சுற்றுலாத் தலமுமாகும். இது மாவட்டத் தலைமையகமான அனந்த்நாக் நகரத்திலிருந்து 53 கிமீ தொலைவில் உள்ளது. மேலும் பகல்காமிலிருந்து 12 கிமீ தொலைவிலும், லித்தர் ஆற்றிலிருந்து 11 கிமீ மேலேயும் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் புல்வெளிகள், ஏரிகள் மற்றும் மலைகளுக்கு பெயர் பெற்ற இது கோல்கோய் பனிப்பாறை, தர்சார் ஏரி, மார்சார் மற்றும் எர்பக்வான் ஏரிக்கு மலையேற்றத்திற்கான அடிப்படை முகாமாகும். இந்த கிராமம் லித்தர் ஆற்றின் கிளை ஆறான ஆரு ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. [3] ஜம்மு & காஷ்மீரின் மிகப்பெரிய தீவன விதை தயாரிப்பு நிலையமும் இக்கிராமத்தில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் ஆரு, நாடு ...
ஆரு | |
---|---|
![]() | |
ஆள்கூறுகள்: 34°5′27″N 75°15′48″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம்]] | அனந்தநாக் |
இந்தியாவில் சமூக மேம்பாட்டுத் தொகுதி | கோவிரிபோரா (பகல்காம்) |
ஏற்றம் | 2,414 m (7,920 ft) |
இனம் | மொழிகள் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 192126 |
கணக்கெடுப்பு குறியீடு | 00222700[2] |
மூடு