ஆப்பிரிக்கப் பொருளியல் நிலை
From Wikipedia, the free encyclopedia
ஆப்பிரிக்கப் பொருளியியல் நிலை ஆப்பிரிக்கப் பெருநிலப்பகுதியின் வணிகம், தொழில்துறை மற்றும் வளங்கள் ஆகியவற்றைப் பொருத்தும் இன்ன பிற கூறுகளின்படியும் அமைந்துள்ளது. சூலை 2005-ல் ஆப்பிரிக்காவின் 54 நாடுகளில் 88.7 கோடி மக்கள் வாழ்ந்திருந்தனர். மாந்தர் வாழும் பெருநிலங்களில் ஆப்பிரிக்காவில்தான் ஏழ்மை மிகுந்துள்ளது. அண்மையில் இக்கண்டத்தின் பல பகுதிகள் முன்னேறி வந்தாலும் 2003-ம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித வளர்ச்சி அறிக்கையில் பட்டியலிடப்பட்ட 175 நாடுகளில் 25 ஆப்பிரிக்க நாடுகள் கடைநிலையில் இருந்தன. இப்பகுதியின் சிக்கலான கொந்தளிக்கும் வரலாறு இந்நிலை ஏற்படவொரு காரணமாகும். வெளிநாட்டவரிடமிருந்து விடுதலை அடைந்த வேளையில் இருந்த நிலைபெறா அரசியல் சூழல் பனிப்போரினால் மேலும் மோசமடைந்தது. இருபதாம் நூற்றாண்டின் நடுவிலிருந்து ஊழலும் ஆட்சியாளர்களின் வன்முறை அரசியலும் ஆப்பிரிக்காவின் பொருளியல் நிலையைப் பின்தங்கிவிடச் செய்தன.
மக்கள் தொகை: | 88.7 கோடி (14%) |
மொத்த உள்நாட்டு உற்பத்தி (PPP): | US$ 1.635 trillion US$ 2.572 trillion (2007) |
GDP (Currency): | $558 billion $1,150 billion (2007) |
GDP/capita (PPP): | $1,968 $2,975 (2007) IMF |
GDP/capita (Currency): | $671 |
நபர் மொத்த உற்பத்தியின் ஆண்டு வளர்ச்சி: |
5.16% (2004-2006) |
10% உயர்வகுப்பினரின் வருமானம்: | 44.7% |
ஒரு மில்லியன் டாலருக்கும் மிகுதியான சொத்து கொண்டவர்கள்: |
0.1 million (0.01%) |
நாளொன்றுக்கு 1$ பணத்துக்கும் குறைவாக வருமானம் கொண்டவர்கள் தொகை: |
36.2% |
வெளிநாட்டுக் கடன் மொத்த உற்பத்தியில் விழுக்காடு |
60.7% (1998) 25.5% (2007) IMF |
வெளிக்கடன் செலுத்தம் மொத்த உற்பத்தியில் விழுக்காடு |
4.2% 3.0% (2007) IMF |
வெளிநாட்டு உதவித்தொகை மொத்த உற்பத்தியில் விழுக்காடு |
3.2% (2001) |
பெண்கள் வருமானம் (கணிப்பு) | ஆண்களில் 51.8% |
Numbers from the UNDP and AfDB. Most numbers exclude some countries for lack of information. Since these tend to be the poorest nations, these numbers tend to have an upwards bias. Numbers are mostly from 2002. | |
வார்ப்புரு:World economy infobox footer | |
edit |
ஏழ்மையின் விளைவாக வாழ்நாள் குறைவு, வன்முறை, அரசியலில் நிலையற்ற தன்மை போன்ற சிக்கல்கள் ஏற்பட்டன. இவை பொருளியல் சிக்கல்களை நீட்டிக்கக் காரணமாகியுள்ளன. இந்நிலையை மாற்றவிழைந்த முயற்சிகள் பல தோல்வியுற்றன. இருந்தும், அண்மைய தரவுகள் சகாராப் பாலைவனத்துக்குத் தெற்கே அமைந்த நாடுகள் உலக நாடுகளின் வளர்ச்சி விரைவையொட்டி வளர்வதைக் காட்டுகின்றன.[1][2]