![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a7/Sahara_satellite_hires.jpg/640px-Sahara_satellite_hires.jpg&w=640&q=50)
சகாரா
From Wikipedia, the free encyclopedia
சஃகாரா அல்லது சஹாரா பாலைவனம் (அரபு:الصحراء الكبرى) என்பது ஆப்பிரிக்காவின் வடபகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய சுடு பாலைவனம் ஆகும். குளிர் பனிப் பாலை நிலமாக அண்டார்ட்டிக்காவைக் கொண்டால் சகாரா பாலைவனம் இரண்டாவது மிகப் பெரிய பாலைவனம் ஆகும். இதன் பரப்பளவு 9,000,000 சதுர கிலோமீட்டர்களாகும் (3,500,000 சதுர மைல்கள்). இப்பரப்பானது ஏறத்தாழ ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அளவுக்கு பெரியதாகும். இப்பாலைவனம் மத்திய தரைக்கடல் கடற்கரையின் வளமான பகுதிகள், மக்ரேபின் அட்லஸ் மலைகள், எகிப்து மற்றும் சூடானில் உள்ள நைல் ஆற்றுப் பள்ளத்தாக்கு ஆகியவற்றில் வளமான பகுதியைத் தவிர்த்து, வட ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியைக் கொண்டுள்ளது. இது கிழக்கில் செங்கடலில் இருந்து நீண்டும், வடக்கே மத்திய தரைக்கடலும், மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலையும் எல்லைகளாக கொண்டு, இதன் நிலப்பரப்பு கடற்கரையை நோக்கிச் செல்லச்செல்ல படிப்படியாக பாலைவனத்திலிருந்து கடலோர சமவெளியாக மாறுகிறது. தெற்கில், இது நைல் நதி பள்ளத்தாக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் துணை சகாராவின் வெப்பமான பகுதிக்கு அருகிலுள்ள அரைப் பாலைவன வெப்பமண்டல சவன்னாவை பட்டாயாச சுற்றியுள்ளது. சகாராவை மேற்கு சஹாரா, நடு அஹாகர் மலைகள், திபெஸ்டிக் மலைகள், ஏய்ர் மலைகள், டெனெரெ பாலைவனம், லிபிய பாலைவனம் போன்ற பல பிரதேசங்களாக பிரிக்கலாம். இப்பாலைவனம் ஏறத்தாழ 2.5 மில்லியன் ஆண்டுப் பழைமை வாய்ந்தது. அதற்கு முன் இங்கே ஏரிகளும் ஆறுகளும் இருந்தன. இப்பாலைவனம் செங்கடலில் ஆரம்பித்து நடு நிலக் கடற்பகுதி, அத்திலாந்திக்குப் பெருங்கடல் ஆகிய நீர்ப்பரப்புக்களை இணைக்கின்றது.
சகாரா (الصحراء الكبرى) | |
பெரும்பாலைவனம் | |
பாலைவனம் | |
நாசாவால் எடுக்கப்பட்ட சகாராப் பாலைவனத்தின் தோற்றம். | |
நாடுகள் | அல்ஜீரியா, சாட், எகிப்து, எரித்ரியா, லிபியா, மாலி, மௌரிடானியா, மொரோகோ, நைகர், சூடான், துனிசியா, மேற்கு சகாரா |
---|---|
மிகவுயர் புள்ளி | எமி கௌசி 11,204 அடி (3,415 m) |
- ஆள்கூறுகள் | 19°47′36″N 18°33′6″E |
மிகத்தாழ் புள்ளி | கட்டாரா தாழ்மையம் −436 அடி (−133 m) |
- ஆள்கூறு | 30°0′0″N 27°5′0″E |
நீளம் | 4,800 கிமீ (2,983 மைல்), E/W |
அகலம் | 1,800 கிமீ (1,118 மைல்), N/S |
பரப்பு | 94,00,000 கிமீ² (36,29,360 ச.மைல்) |
Biome | பாலைவனம் |
இங்குள்ள சில மணற் குன்றுகள் கிட்டத்தட்ட 180மீ (590 அடி) உயரம் வரை இருக்கும். சகாரா என்னும் பெயர் பொதுவாக வழங்கினாலும், இது அரபு மொழியிற் பாலைவனம் என்னும் சொல்லாகிய சஹ்றா (صحراءⓘ) என்பதில் இருந்து எழுந்ததாகும்.