ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன்
From Wikipedia, the free encyclopedia
டென்மார்க்கில் எச். சி ஆன்டர்சன் என அறியப்படும் ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் (ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன், Hans Christian Andersen; ஏப்ரல் 2, 1805 – ஆகத்து 4, 1875) ஒரு டேனிய மொழி எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். இவர் குறிப்பாகச் சிறுவர்களுக்கான கதைகளை எழுதுவதன் மூலம் புகழ் பெற்றார். த இசுட்டெட்பாஸ்ட் டின் சோல்டியர் (The Steadfast Tin Soldier), த சினோ குயீன் (The Snow Queen), த லிட்டில் மேர்மெய்ட் (The Little Mermaid), தம்பெலினா (Thumbelina), த லிட்டில் மட்ச் கேர்ல் (The Little Match Girl), த அக்லி டக்ளிங் (The Ugly Duckling) போன்றவை இவ்வாறான கதைகளுள் குறிப்பிடத் தக்கவை. இவரது வாழ்நாளில் உலகம் முழுவதிலும் உள்ள குழந்தைகளைத் தனது ஆக்கங்கள் மூலம் இவர் மகிழ்வித்தார். இவருடைய கதைகள் 120 மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்படிருப்பதுடன், இக் கதைகளைத் தழுவிப் பல திரைப்படங்களும், நாடகங்களும், நடன நிகழ்ச்சிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.[1]
ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் | |
---|---|
1869il ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் | |
பிறப்பு | ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் (1805-04-02)ஏப்ரல் 2, 1805 ஒடென்சு, டென்மார்க் |
இறப்பு | ஆகத்து 4, 1875(1875-08-04) (அகவை 70) கோப்பன்கேகன், டென்மார்க் |
தொழில் | புதின எழுத்தாளர், சிறுகதை எழுத்தாளர், சிறுவர் கதை எழுத்தாளர் |
தேசியம் | டேனியர் |
வகை | சிறுவர் இலக்கியம், பயண இலக்கியம் |
கையொப்பம் | |