![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5c/SbIstructure.jpg/640px-SbIstructure.jpg&w=640&q=50)
ஆண்டிமனி மூவயோடைடு
வேதிச்சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
ஆண்டிமனி மூவயோடைடு ( Antimony triiodide) என்பது (SbI3) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மாணிக்கச் சிவப்பிலான இத்திண்மம் மட்டுமே ஆண்டிமனி தனிமத்தின் அடையாளப்படுத்தப்பட்ட ஒர் இரும அயோடைடு ஆகும். அதாவது முழு சேர்மமும் (SbxIy) என்ற வாய்ப்பாட்டுக்குள் தனிப்படுத்தப்படுகிறது. இது ஆண்டிமனியை +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் கொண்டுள்ளது. கனமான முதன்மைக்குழு தனிமங்களின் பல அயோடைடுகள் போல இவற்றின் கட்டமைப்புகள் அவற்றின் திட, திண்ம மற்றும் வாயு நிலைகளைச் சார்ந்திருக்கின்றன. வலுவளவு ஓட்டு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கையில் எதிர்பார்த்தபடியே, வாயுநிலை (SbI3) மூலக்கூறு சார்ந்த ஒரு பட்டைக்கூம்பு வகைக் கட்டமைப்புடையதாகும். திண்ம நிலையில் ஆண்டிமனி (Sb) மையங்கள் ஆறு அயோடைடு ஈந்தணைவிகளால் ஆக்கப்பட்ட ஒர் எண்முகத்திண்மமாக இருந்தாலும், மூன்று ஈந்தணைவிகள் நெருக்கமாகவும் மூன்று ஈந்தணைவிகள் அதிக இடைவெளியுடனும் காணப்படுகின்றன[5] . ஆனால், இதனை ஒத்த சேர்மமான பிசுமத்து அயோடைடு (BiI3 ) இல் ஆறு பிசுமத்து – அயோடைடு (Bi—I) பிணைப்பு இடைவெளிகளும் சமமாகவே உள்ளன[6].
| |||
![]() | |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
ஆண்டிமனி டிரை அயோடைடு, ஆண்டிமனி(III) அயோடைடு | |||
முறையான ஐயூபிஏசி பெயர்
மூவயோடோசுடிபேன் | |||
இனங்காட்டிகள் | |||
7790-44-5 ![]() | |||
ChemSpider | 23032 ![]() | ||
EC number | 232-205-8 | ||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
பப்கெம் | 24630 | ||
| |||
பண்புகள் | |||
I3Sb | |||
வாய்ப்பாட்டு எடை | 502.47 g·mol−1 | ||
தோற்றம் | red crystals | ||
அடர்த்தி | 4.921 g/cm3 | ||
உருகுநிலை | 170.5 °C (338.9 °F; 443.6 K) | ||
கொதிநிலை | 401.6 °C (754.9 °F; 674.8 K) | ||
reacts | |||
கரைதிறன் | பென்சீன், ஆல்ககால், அசிட்டோன், CS2, HCl, KI, SnCl4, C2H7N ஆகியனவற்றில் கரையும். CHCl3, CCl4 ஆகியனவற்றில் கரையாது.[1] | ||
diiodomethane-இல் கரைதிறன் | 10.15% v/v (12 °C)[2] | ||
-0.0001472 cm3/ mol | |||
கட்டமைப்பு | |||
படிக அமைப்பு | சாய்சதுரம், hR24, | ||
புறவெளித் தொகுதி | R-3, No. 148 | ||
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 1.58 D | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
-100.4 கியூ/மோல்[1] | ||
வெப்பக் கொண்மை, C | 81.6 யூ/மோல்·கெ (வாயு)[1] | ||
தீங்குகள் | |||
GHS pictograms | ![]() ![]() | ||
GHS signal word | Warning | ||
H302, H332, H411[3] | |||
P273[3] | |||
ஈயூ வகைப்பாடு | ![]() ![]() | ||
R-சொற்றொடர்கள் | R20/22, R51/53 | ||
S-சொற்றொடர்கள் | S61 | ||
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |||
அனுமதிக்கத்தக்க வரம்பு |
TWA 0.5 mg/m3 (as Sb)[4] | ||
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு |
TWA 0.5 mg/m3 (as Sb)[4] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||