![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ae/Al-Ghazali.png/640px-Al-Ghazali.png&w=640&q=50)
அல் கசாலி
From Wikipedia, the free encyclopedia
அபூ ஹமித் முகம்மது இப்னு முகம்மது அல்-கஸ்ஸாலி / ஃஙஸ்ஸாலி அரபு மொழி: أبو حامد محمد بن محمد الغزالي; (அண். 1058 1058 – 19 டிசம்பர் 1111), சுருக்கமாக அல்-கஸ்ஸாலி என்று அழைக்கப்பட்டார். அரபி மொழியில் கஸ்ஸாலி என்றும், பெர்ஸிய மொழியில் அல்கஸெலஸ் அல்லது அல்கெஸெல் என்றும் அழைக்கப்படுகிறார். இடைக்கால மேற்கத்திய உலகில் இவர் பெர்ஸிய இறையியல் வல்லுனராகவும், சிறந்த சட்ட இயல் வல்லுநராகவும், தத்துவ ஆராய்ச்சியாளராகவும், சாமானிய அறிவுநிலை கடந்த ஆழ்ந்த உட்பொருளுடைய ஆன்மிகச் சிந்தனையாளராகவும் திகழ்ந்தார்.[15][16]
அல் கஸாலி (Al-Ghazālī) (Algazel) حجة الإسلام الإمام أبو حامد الغزالي | |
---|---|
![]() | |
பட்டம் | ஹுஜ்ஜத் உல்-இஸ்லாம் (Hujjat ul-Islam (நன்மதிப்பு அடைமொழி)[1] |
பிறப்பு | (அபு ஹமீது முஹம்மது இப்னு முஹம்மது அல்-கஸ்ஸாலி) 1058 கிறிஸ்து ஆண்டு டஸ், ஈரான், பெர்ஷியா, மாபெரும் செல்ஜக் பேரரசு (Tus, Iran, Persia, Seljuq Empire |
இறப்பு | 19 டிசம்பர் 1111 (வயது 53) டஸ் (Tus), ஈரான் (Iran), பெர்ஷியா (Persia), செல்ஜக் பேரரசு (Seljuq) |
காலம் | இஸ்லாமியர்களின் பொற்காலம் |
பிராந்தியம் | மாபெரும் செல்ஜக் பேரரசு நிஷார்பூர் (Nishapur)[2]:292 அப்பாசித் காலிபேட் (பாக்தாத்)/ ஜெருசேலம்/ தமாஸ்கஸ் [2]:292 |
மதப்பிரிவு | சுன்னி(Sunni)[3][4] |
சட்டநெறி | ஷாஃபி (Shafi`i) |
சமய நம்பிக்கை | அஷஹ்ரி(Ash'ari)[5][6] |
முதன்மை ஆர்வம் | சூஃபித்துவம்(Sufism), இறையியல் (கலாம் kalam)), தத்துவம், ஏரணம், ஃபை(Fiqh) |
ஆக்கங்கள் | மத அறிவியல் கொள்கைகளின் மீள்பார்வை, தத்துவஞானிகளிடையே தொடர்பின்மை, கிமியா-இ ஸாதத் (Kimiya-yi sa'ādat) எனும் இன்பத்தின் இரசவாதம் |
செல்வாக்கு செலுத்தியோர்
| |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
அல் கஸ்ஸாலி சில வரலாற்று ஆசிரியர்களால் "முகம்மது நபிக்குப்பின் செல்வாக்கு மிக்க ஒரே முஸ்லிம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.[17] பாரம்பரிய முறைப்படி, சமூகத்தின் நம்பிக்கையை மீட்க, ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒருவர் தோன்றுவார். அவர்களுள், இவரும் ஒருவர் என்று கருதப்படுகிறார். இஸ்லாமிய நாகரிகத்தில் அவர் முஜத்திது என்றும் விசுவாசத்தை புதுப்பித்தவர் என்றும் அழைக்கப்படுகிறார்.[18][19][20]
அல் கஸ்ஸாலி அனைவராலும், "இஸ்லாமியத்தின் ஆதாரம் (Hujjat al-Islam)" என்று மிகுந்த மரியாதையுடன் அழைக்கப்பட்டார். அவரது படைப்புகள், சமகாலத்தவர்களால் மிகவும் பாராட்டப்பட்டன.[1]
இவர் தத்துவத்திலிருந்து அறிவியலை பிரித்து ஆய்வு செய்ய வேண்டும் என வாதிட்டார். இஸ்லாமிய அறிவியல் முன்னேற்றத்திற்கு எதிராக தீங்கு விளைவிப்பதாக இஸ்லாமிய தத்துவவாதிகளில் சில பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.[21][page needed][22][23]
அவரது பணி, இஸ்லாமிய தத்துவத்தின் போக்கை வெற்றிகரமானதாக மாற்றியது. ஆரம்ப கால இஸ்லாமிய புதியபிளாட்டோனிசக் (Neoplatonism) கொள்கைகள், ஹெலனிஸ்டிக் (Hellenistic) தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. அவர் தன் காலத்தில் இருந்த இஸ்லாமிய பழமைவாதக் கொள்கைகளை சூபித்துவத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கச் செய்தார்.
இதனால், தனிநபர்கள் கலாம் (kalam) என்னும் மரபுவழி இறையியலை சூபித்துவத்துடன் இணைப்பது அதிகரித்தது. இரண்டு தரப்புகளின் ஆதரவாளர்களுக்கிடையே பரஸ்பர போற்றுதல் உணர்வு உருவானது. இது குழுக்களிடையே இருந்த சிக்கல்களை நீக்கியது.