அல் அக்சா பள்ளிவாசல்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
அல் அக்சா பள்ளிவாசல் (அரபு:المسجد الاقصى, மஸ்ஜித் அல்-அக்ஸா) யெருசலேமிலுள்ள, மாஜெத் குன்று அல்லது அல்-ஹாரம் ஆஷ்-ஷெரிப் (Noble Sanctuary) எனப்படும், சமயக் கட்டிடத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.
அல் அக்சா பள்ளிவாசல் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | பழைய நகர் |
புவியியல் ஆள்கூறுகள் | 31.77617°N 35.23583°E |
சமயம் | இசுலாம் |
தலைமை | Imam(s): Muhammad Ahmad Hussein |
இசுலாம்களின் மரபுப்படி முகமது நபி அவர்கள் மலை 621 இலிருந்து சுவர்க்கம் சென்றதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, இந்த பள்ளிவாசல் முஸ்லிம்களின் மூன்றாவது புனிதமான பள்ளிவாசலாகக் கருதப்படுகிறது. பாறைக் குவிமாடம் இற்குப் பின்னர் (கிபி 690), கிபி 710 இல், உமயாட்டுகளால் மரத்தாலான முதலாவது அல் அக்ஸா பள்ளிவாசல் கட்டப்பட்டது. இது குறைந்தது 5 தடவையாவது மீளக்கட்டப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால், ஒரு தடவையாவது, முற்றாக அழிந்துள்ளது. கடைசியாக, பெரிய மீளமைப்பு 1035 ஆம் ஆண்டு நடைபெற்றது.
அல் அக்சா பள்ளிவாசலே யெருசலேமிலுள்ள மிகப்பெரிய பள்ளிவாசலாகும். 5000 பேர்வரை உள்ளேயும், வெளியிலுமிருந்து தொழக்கூடிய வசதிகள் உண்டு. இக்கட்டிடத்தில், சிலுவைபடையினர்களின் (Crusader) பாணியுட்பட பல பாணிகளின் கலவை காணப்படுகிறது. சிலுவைபடையினர் யெருசலேமைக் கைப்பற்றி வைத்திருந்தபோது, இந்த பள்ளிவாசல் ஓர் அரண்மனையாகப் பயன்படுத்தினார்கள். முற்காலத்தில் யூத ஆலயம் இருந்த இடத்தில் இந்த பள்ளிவாசல் கட்டப்பட்டது என்ற நம்பிக்கையில், அப்பொழுது இது சொலமனின் ஆலயம் என அழைக்கப்பட்டது.[சான்று தேவை] அவ்வப்போது, அல்-அகசா ஆக்கிரமிப்பு யூத தேசமான இஸ்ரேலின் ராணுவ தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காக இருந்தது எனினும், பெரும்பாலான தாக்குதல்கள், பாலஸ்தீன மற்றும் ஜோர்டான் பாதுகாப்புப் படைகளால் முறியடிக்கப்பட்டது
இம் பள்ளிவாசலின் சுற்றுமதிலின் ஒருபகுதியான மேற்குச் சுவர் யூதர்களின் வணக்கத்துக்குரியதாக இருப்பதால், யெரூசலத்தின் ஒரு சிறிய பகுதியான இது முசுலிம்கள், யூதர்களுக்கிடையேயான முறுகல் நிலைக்குக் காரணமாகக் கூடியது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.