ஈரானின் மாசாந்தரன் மாகாணத்தில் உள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
அமோல் ( Amol ) ⓘ அமுல் எனவும் அறியப்படும் என்பது ஈரானின் மாசாந்தரன் மாகாணத்தில் உள்ள அமோல் மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும். இது மாவட்டத்திற்கு தலைநகராகவும் செயல்படுகிறது. [5]
அமோல்
آمل பண்டைய பெயர்கள்: அமெர்தாத், அமெல்ட், அமுயி, அமோ, அமெலா, அமோல் | |
---|---|
நகரம் | |
நாடு | ஈரான் |
மாகாணங்கள் | மாசாந்தரான் |
மண்டலம் | அமோல் |
பாக்ச்சு | மத்திய மாவட்டம் |
ஒருங்கிணைந்தது (நகரம்) | 1923[1] |
அரசு | |
• நகரத் தந்தை | அலி தாவூதி [2] |
பரப்பளவு | |
• நகரம் | 21 km2 (8 sq mi) |
ஏற்றம் | 76 m (249 ft) |
மக்கள்தொகை (2016 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி) | |
• நகர்ப்புறம் | 2,37,528[3] |
• பெருநகர் | 3,64,692 |
நேர வலயம் | ஒசநே+3:30 (ஈரானிய சீர் நேரம்) |
அஞ்சல் குறியேடு | 46131-46391[4] |
இடக் குறியீடு | (+98) 11 |
இணையதளம் | amol amol |
அமோல் அராசு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது காசுப்பியன் கடலுக்கு தெற்கே 20 கி.மீ (12 மை) தொலைவிலும் அல்போர்சு மலைகளுக்கு வடக்கே 10 கி.மீ (6.2 மை) தொலைவிலும் உள்ளது. மேலும், இது தெகுரானிலிருந்து 180 கிலோமீட்டர்கள் (110 மை) தொலைவிலும், மாகாண தலைநகரான சாரிக்கு மேற்கே 60 கிலோமீட்டர்கள் (37 மை) தொலைவிலும் உள்ளது.
இது ஈரானின் பழமையான நகரங்களில் ஒன்றாகவும் ஒரு வரலாற்று நகரமாகவும் உள்ளது. அதன் அடித்தளம் அமர்டுக்கு முந்தையது. எழுதப்பட்ட வரலாற்றில், அமோல், சா நாமாவின், நிகழ்வுகளின் முக்கிய மையங்களில் ஒன்றாக இருந்துள்ளது. அமோல் என்பது ஈரானின் அரிசி தலைநகரான மாசாந்தரனின் தொழில் மையமாகவும் கலாச்சாரத்தின் துருவமாகவும் உள்ளது. ஈரானின் போக்குவரத்து, விவசாயம், சுற்றுலா மற்றும் தொழில்துறையின் மிக முக்கியமான நகரங்களில் இதுவும் ஒன்று. மேலும் இது ஈரானின் பால் மற்றும் இறைச்சி பொருட்கள் மையமகவும் உள்ளது. மேலும் இது வரலாற்று, அறிவியல் மற்றும் தத்துவ நகரம், இறக்காத நகரம் மற்றும் எசார் சங்கர் நகரம் எனவும் அறியப்படுகிறது [6]
ஈரானின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றான இந்நகரத்தை பல வரலாற்றாசிரியர்கள் மற்றும் புவியியலாளர்கள் இது கிமு 1 மில்லினியத்தில் நிறுவப்பட்டதாக நம்புகின்றனர். புராண அரசர் தக்முராசின் ஆட்சியின் போது நகரம் அதன் எழுச்சியைக் கண்டதாக சில வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். [7]
சமீபத்திய ஆண்டுகளில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கலே கேசு மலை மீது, சில பழங்கால நகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. தொல்லியல் பகுப்பாய்வு கிமு 1 ஆம் மில்லினியத்தைக் கணக்கிட்டது. வெண்கல வயது முதல் இன்றுவரை நகைகள் மற்றும் பொருட்களின் பின்னணியை வெளிப்படுத்தியது. சகாப்தத்தின் பாலிரான் படைப்புகளில் ஆய்வு செய்ததில் பழைய கற்காலப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.