![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4f/Map_River_Amaravathi_TA.svg/langta-640px-Map_River_Amaravathi_TA.svg.png&w=640&q=50)
அமராவதி ஆறு
தமிழ்நாட்டில் உள்ள ஒரு ஆறு / From Wikipedia, the free encyclopedia
அமராவதி ஆறு (Amaravati River) கரூர் மாவட்டம், திருப்பூர் மாவட்டம் இரண்டையும் வளப்படுத்தும் காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாகும். பழனி மலைத்தொடருக்கும் ஆனைமலைத்தொடருக்கும் இடையில் உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகிறது. இதனுடன் பாம்பாறு, சின்னாறு மற்றும் தேவாறு ஆகியவை இணைந்து கொள்கின்றன. இது அமராவதி அணை மூலம் தடுக்கப்பட்டு அமராவதி நீர்த்தேக்கம் தோன்றுகிறது. அங்கிருந்து வடகிழக்காக செல்லுகையில் கொழுமம், அருகில் குதிரை ஆறு இணைந்த பின் கொமரலிங்கம்,தாராபுரம்,சின்னதாராபுரம் பகுதி வழியாக பாய்ந்து கரூர் அருகே காவிரியுடன் கலக்கிறது.[2] உபநதிகள் சண்முகா நதி, குடகனாறு, உப்பாறு ஆகியன. ஆண் பொருநை என்ற பெயரும் அமராவதி ஆறுக்கு உண்டு
விரைவான உண்மைகள் அமராவதி ஆறு ஆன்பொருநை, பெயர்க்காரணம் ...
அமராவதி ஆறு ஆன்பொருநை | |
---|---|
![]() அமராவதி ஆறு மற்றும் அதன் உபநதிகள் | |
பெயர்க்காரணம் | ஆன்பொருநை = ஆன் + பொருநை (புறநானூறு, 36) |
பெயர் | Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help) |
அமைவு | |
நாடு | ![]() |
பகுதி | கொங்கு நாடு |
மாவட்டம் | திருப்பூர் மாவட்டம், கரூர் மாவட்டம் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | ஆனைமலை குன்றுகள், சின்னாறு, பாம்பாறு at 10°21′2″N 77°14′14″E |
⁃ ஏற்றம் | 473 மீட்டர்கள் (1,552 அடி) |
முகத்துவாரம் | கரூர் at 10°57′36″N 78°4′53″E |
⁃ உயர ஏற்றம் | 360 அடிகள் (110 m) |
நீளம் | 282 கிலோமீட்டர்கள் (175 mi) |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
அடையாளங்கள் | இடுக்கி மாவட்டம், கேரளா, தாராபுரம், கரூர் |
நீர்தேக்கங்கள் | 8,380 சதுர கிலோமீட்டர்கள் (3,240 sq mi)[1] |
மூடு