அப்ரா
From Wikipedia, the free encyclopedia
அப்ரா (Abra) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், கோர்டில்லெரா நிர்வாகப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஆறு மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் பங்குவெட் ஆகும். இம்மாகாணத்தில் 303 கிராமங்களும், 27 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் இயுஸ்டாகியோ பேர்சமின் ஆவார். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக் அப்ரா மாகாணத்தின் சனத்தொகை 241,160 ஆகும்.[2] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 29ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 68ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் இலோகானோ, தகலாகு, ஆங்கிலம் உள்ளடங்கலாக ஆறு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன.
விரைவான உண்மைகள் அப்ரா, நாடு ...
அப்ரா | |
---|---|
மாகாணம் | |
நாடு | பிலிப்பீன்சு |
பிராந்தியம் | கோர்டில்லெரா நிர்வாகப் பிராந்தியம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,165.25 km2 (1,608.21 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 2,41,160 |
• அடர்த்தி | 58/km2 (150/sq mi) |
நேர வலயம் | ஒசநே+8 (பிசீநே) |
மூடு