அக்ரிடின்
வேதியல் சேர்மம் / From Wikipedia, the free encyclopedia
அக்ரிடின் (Acridine) என்பது C13H9N என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமச் சேர்மம் ஆகும். இது நைட்ரசனின் பல இன வளையச் சேர்மங்கள் எனும் கரிமவேதிப் பிரிவினைச் சேர்ந்தது ஆகும். தாய் வளையத்தில் பதிலீடு செய்து பெறப்பட்ட ஒரு சேர்மமாக அக்ரிடின் இருக்கிறது. ஒரு சமதள மூலக்கூறான இச்சேர்மம் கட்டமைப்புரீதியாக ஆந்திரசீனுடன் தொடர்பு கொண்டுள்ளது. ஆந்திரசீன் கட்டமைப்பின் மத்தியில் உள்ள CH குழுக்களுக்குப் பதிலாக, அக்ரிடினில் நைட்ரஜன் குழுக்கள் இடம்பெற்றுள்ளன. தொடர்புடைய பிரிடின் , குயினலீன் மூலக்கூறுகளைப் போல அக்ரிடினும் வீரியங்குறைந்த கார இயல்புடையது ஆகும். கிட்டத்தட்ட நிறமற்றதொரு திண்மமாக காணப்படும் அக்ரிடின் வர்த்தகரீதியாக எந்தப் பயன்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. ஊசிவடிவப் படிகங்களாகக் கிடைக்கும் அக்ரிடின் ஒரு காலத்தில் வண்ணச் சாயங்கள் தயாரிப்பில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அக்ரிடின் | |
முறையான ஐயூபிஏசி பெயர்
இருபென்சோ[b,e]பிரிடின்[1] | |
வேறு பெயர்கள்
2,3-பென்சோகுயினோலின்[2] | |
இனங்காட்டிகள் | |
260-94-6 Y | |
ChEBI | CHEBI:36420 Y |
ChEMBL | ChEMBL39677 Y |
ChemSpider | 8860 Y |
EC number | 205-971-6 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 9215 |
வே.ந.வி.ப எண் | AR7175000 |
| |
பண்புகள் | |
C13H9N | |
வாய்ப்பாட்டு எடை | 179.22 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான தூள் |
மணம் | உறுத்தும் |
அடர்த்தி | 1.005 கி/செ.மீ3 (20 °C)[1] |
உருகுநிலை | 106–110 °C (223–230 °F; 379–383 K) at 760 மி.மீ.பாதரசம்[1] |
கொதிநிலை | 344.86 °C (652.75 °F; 618.01 K) at 760 மி.மீ.பாதரசம்[1] |
46.5 மி.கி/லி[1] | |
கரைதிறன் | CCl4, ஆல்ககால்கள், (C2H5)2O, C6H6 ஆகியவற்றில் கரையும்[1] |
மட. P | 3.4[1] |
ஆவியமுக்கம் | 0.34 கி.பா (150 °செ) 2.39 கி.பா (200 °செ) 11.13 கி.பா (250 °செ)[3] |
காடித்தன்மை எண் (pKa) | 5.58 (20 °செ)[1] |
λmax | 392 நா.மீ [4] |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
179.4 கியூ/மோல் [1] |
Std enthalpy of combustion ΔcH |
6581.3 கியூ/மோல்l[3] |
நியம மோலார் எந்திரோப்பி S |
208.03 யூ/மோல்·கெ[3] |
வெப்பக் கொண்மை, C | 205.07 யூ/மோல்·கெ[3] |
தீங்குகள் | |
GHS pictograms | [4] |
GHS signal word | அபாயம் |
H302[4] | |
ஈயூ வகைப்பாடு | Xn |
R-சொற்றொடர்கள் | R22, R36/37/38 |
S-சொற்றொடர்கள் | (S2), S24/25, S36 |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose) |
500 மி.கி/கி.கி (சுண்டெலி, வாய்வழி)[2] |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு |
TWA 0.2 mg/m3 (பென்சீன்-பகுதியாக கரையும்) [5] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |