வராக அவதாரம்
From Wikipedia, the free encyclopedia
வராக அவதாரம் விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம் ஆகும். இதில் இவர் பன்றி (வராகம்) அவதாரம் எடுத்தார். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற இரணியனின் தம்பி இரண்யாட்சன் என்ற அசுரனுடன், வராக அவதாரத்தில், விஷ்ணு, ஆயிரம் ஆண்டுகள் போர் செய்து வென்றார் என்பது ஐதிகம்.[1] சடபாதபிராமணம், தைத்தர்ய ஆரண்யகம் மற்றும் இராமாயணம் போன்ற இலக்கியங்களில் இந்த அவதாரத்தினைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. [1] வராகப் படிமம் என்பதை ஆதிவராகம், யக்ஞவராகம், பிரளய வராகம் என்று மூன்றாகப் பிரித்துள்ளனர். இந்தப் பிரிவு, அதன் வடிவத்திற்கேற்ற படி பிரிக்கப்பட்டுள்ளது. [1] திருமால் பன்றி உருவில் ஏழு உலக மண்ணையும் இடறிப் பார்த்தும், சிவன் அடிகளைக் காண முடியவில்லை.[2]