ராஜேஷ் கன்னா
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
ராஜேஷ் கன்னா ( Rajesh Khanna, பிறப்பு ஜதின் கன்னா, திசம்பர் 29, 1942 - சூலை 18,2012[1]) ஓர் இந்தித் திரைப்பட நடிகர்,[2] இந்தித் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் காங்கிரசு அரசியல்வாதி.
ராஜேஷ் கன்னா | |
---|---|
பிறப்பு | ஜதின் கன்னா (1942-12-29)29 திசம்பர் 1942 அமிர்தசரஸ், பஞ்சாப், இந்தியா |
இறப்பு | சூலை 18, 2012(2012-07-18) (அகவை 69) மும்பை, இந்தியா |
மற்ற பெயர்கள் | ஜதின் கன்னா காக்கா ஆர்கே |
பணி | திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1966–2012 (நடிகர்)
1991–1996 (அரசியல்) 1971–1995 (தயாரிப்பாளர்) |
வாழ்க்கைத் துணை | டிம்பிள் கபாடியா (1973–1984) |
பிள்ளைகள் | டிவிங்கிள் கன்னா ரிங்கே கன்னா |
1966ஆம் ஆண்டு ஆக்ரி கத் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான ராஜேஷ் கன்னா 1969ஆம் ஆண்டு வெளியான ஆராதனா திரைப்படம் மூலம் பிரபலமானார். இதுவரை 163 இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார்; இவற்றில் 22 திரைப்படங்களில் இரண்டு நாயகர்களி்ல் ஒருவராக நடித்துள்ளார்.[3] மூன்று முறை பிலிம்பேர் விருதுகள் வென்றுள்ள இவரது பெயர் பதினான்கு முறை இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பிலிம்பேர் வாழ்நாள் சாதனை விருது இவருக்கு 2005இல் வழங்கப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் வெற்றிப்படங்களை அடுத்தடுத்து கொடுத்து புகழேணியின் உச்சக்கட்டத்திற்கு சென்ற இவரே இந்தித் திரைப்படத்துறையின் முதல் சூப்பர் ஸ்டார் என அறியப்படுகிறார்.[4][5][6][7] இவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாக ஆராதனா, அமர்பிரேம், ஆனந்த், கத்தி பதங், ராஸ், பகாரோங் கே சப்னே, இத்தெஃபாக், சச்சா ஜூதா, ராஜா ராணி, பவார்ச்சி ஆகியன அமைந்தன.