மொரிசியசு
இந்தியப் பெருங்கடலிலுள்ள இறையாண்மையுள்ள ஒரு தீவு / From Wikipedia, the free encyclopedia
மொரிசியசு அல்லது மொரிசியஸ் (Mauritius) ஆபிரிக்க கண்டத்திற்கு தென் கிழக்கு கடலோரப் பகுதியில் இருக்கும் ஒரு தீவு நாடு. இது மடகாஸ்கர் தீவுக்கு 900 கிமீ கிழக்கே அமைந்துள்ளது. மொரியசு குடியரசு கர்காடசு கராஜொஸ், ரொட்ரிகசு, அகலேகா தீவுகள் ஆகிய தீவுகளையும் கொண்டது. மொரிசியசு தீவு மசுகரீன் தீவுகளின் ஒரு பகுதியாகும். இத்தீவுக்கூட்டத்தில் மொரிசியசுக்குத் தென்மேற்கே 200கி.மீ. தூரத்தில் பிரஞ்சுத் தீவான ரியூனியனும், வடகிழக்கே 570கி.மீ. தூரத்தில் ரொட்ரிகசும் உள்ளன.
மொரிசியசு குடியரசு Republic of Mauritius République de Maurice | |
---|---|
குறிக்கோள்: "Stella Clavisque Maris Indici" (இலத்தீன்) "இந்தியப் பெருங்கடலின் நட்சத்திரமும் சாவியும்" | |
நாட்டுப்பண்: அன்னைபூமி | |
தலைநகரம் | போர்ட் லூயிஸ் |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம்1 |
பிராந்திய மொழிகள் | மொரிசியசு கிரெயோல், பிரெஞ்சு, இந்தி, உருது, தமிழ், மாண்டரீன், தெலுங்கு, போஜ்புரி |
மக்கள் | மொரிசியர் |
அரசாங்கம் | நாடாளுமன்றக் குடியரசு |
• சனாதிபதி | அமீனா குரிப் பாகிம் |
• தலைமை அமைச்சர் | நவின்சந்திரா ராம்கூலம் |
விடுதலை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து | |
• நாள் | மார்ச் 12, 1968 |
• குடியரசு | மார்ச் 12, 1992 |
பரப்பு | |
• மொத்தம் | 2,040 km2 (790 sq mi) (179வது) |
• நீர் (%) | 0.05 |
மக்கள் தொகை | |
• 2008 மதிப்பிடு | 1,288,0002 (151வது) |
• 2000 கணக்கெடுப்பு | 1,179,137 |
• அடர்த்தி | 631.4/km2 (1,635.3/sq mi) (18வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2010 மதிப்பீடு |
• மொத்தம் | $18.061 பில்லியன் (119வது) |
• தலைவிகிதம் | $14,097 (51வது) |
மமேசு (2010) | 0.701 Error: Invalid HDI value · 72வது |
நாணயம் | மொரிசியசு ரூபாய் (MUR) |
நேர வலயம் | ஒ.அ.நே+4 (மொரிசியசு நேரம்) |
ஒ.அ.நே+4 (அவதானிப்பில் இல்லை) | |
அழைப்புக்குறி | 230 |
இணையக் குறி | .mu |
நெப்போலியப் போர்களின் போது பிரித்தானியர் இதன் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டனர். 1968ல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது. இது ஒரு பாராளுமன்றக் குடியரசாகும். மேலும் ஆபிரிக்க ஒன்றியம், பொதுநலவாய நாடுகள், தெற்கு ஆபிரிக்க அபிவிருத்திச் சமூகம் போன்றவற்றின் அங்கத்தவராகவும் உள்ளது.
மொரிசியசானது டோடோ பறவைகளின் அறியப்பட்ட ஒரே தாயகமாகும். இதன் நிறையினாலும், பறக்கமுடியாத தன்மையினாலும் குடியேற்றக்காரர்களின் இலகுவான உணவாக மாறியது. இதனால் முதலாவது ஐரோப்பியக் குடியேற்றத்திலிருந்து 80 ஆண்டுகளுக்குள் இது இனமழிந்து போனது.