மலையாளம்
திராவிட மொழி / From Wikipedia, the free encyclopedia
மலையாளம் (Malayalam மலையாளம்: മലയാളം, "மலயாளம்") தென்னிந்தியாவிலுள்ள கேரளத்தில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். இந்திய அரசு அங்கீகரித்துள்ள மொழிகளில் இதுவும் ஒன்று. இம்மொழி கேரளத்தின் அதிகாரப்பூர்வ மொழியாகும். தமிழினை மூல மொழியாக கொண்டு தோன்றிய மலையாளம், நாளடைவில் தனி மொழியாக உருப்பெற்றது. சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகள் போன்றவற்றிலும் இம்மொழி பேசப்படுகிறது. திராவிட குடும்பத்தைச் சேர்ந்த மலையாளத்துக்கு தமிழ், சமசுகிருதம் முதலிய செம்மொழிகளோடு தெளிவான தொடர்புகள் உண்டு. மலையாளம் பேசுவோரைப் பொதுவாக மலையாளிகள் என அழைப்பர். இருப்பினும், அவர்களுடைய மாநிலத்தினைக் கொண்டு கேரளர்கள் எனவும் அழைப்பதுண்டு. உலகத்தில் 35 000 000 மக்கள் மலையாள மொழியினைப் பேசுகின்றனர்.
விரைவான உண்மைகள் மலையாளம், நாடு(கள்) ...
மலையாளம் | |
---|---|
മലയാളം (மலயாளம்) | |
நாடு(கள்) | இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் |
பிராந்தியம் | கேரளம், புதுச்சேரி, மைய்யழி, ஐக்கிய இராச்சியம் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 35,757,100[1]. 35,351,000 இந்தியாவில் 37,000[2] மலேசியாவில் 10,000 சிங்கப்பூரில் (date missing) |
திராவிடம்
| |
மலையாள எழுத்துக்கள் | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | இந்தியா
|
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | ml |
ISO 639-2 | mal |
ISO 639-3 | mal |
மூடு